பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

வருங்கால மானிட சமுதாயம்


அந்தப் " பெருங்கடலை" - அறமும் சமன்மையும் நிலவும் வருங்கால சமுதாயத்தை - தேடியலைந்தனர்; ஆராய்ந்தனர். ஆனால் அந்தக் கடலின் அடியாழத்துக் குள் நடத்திய ஆராய்சி பெரும்பாலும் பிழையாகவே முடிந்தது; அது நடைமுறைக்குகந்ததாக இல்லாதிருந்தது; போதுமான அளவுக்குத் "தகுதி" பெற்றிருக்கவும் இல்லை. அந்த ஆராச்சியாளர்கள் பொதுவுடைமைக்குச் செல்லும் நடைமுறைக்குகந்த வழியைக் காணவில்லை; உண்மையில் அவர்களால் காண முடியவில்லை.

"நடைமுறைக்குகந்தம்" என்று சொன்னால் அது மாந்தர்களின் சித்தத்தையோ, அறிவையோ, விருப்பையோ பொருட்படுத்தாது தானே நிலவிவரும் ஒன்றாகும். அறிவியலின் நிலையை வளர்த்துச் செல்ல, பொதுவுடைமைக் கொள்கையானது வரலாற்று நியதிகளின் ஆதரவைப் பெற்றாக வேண்டும். இந்த நியதிகளை சிறப்புமிக்க மெய்மைவாணர்களும் புரட்சிவாணர்ளும் ஆன காரல் மார்க்சும் பிரெட்ரிக் ஏங்கெல்சும் சென்ற நூற்றாண்டின் 40ஆம் ஆண்டுகளின் போது கண்டு பிடித்த போதுதான் இந்த ஆதரவு கிட்டியது.

மார்க்சும், ஏங்கெல்சும், லெனினும் இவர்களது சீடர்களும் சமுதாய வளர்ச்சியின் எதார்த்த பூர்வமான நியதிகளை ஆராய்ந்தனர்; கம்யூனிசக் கொள்கையை உட்டோப்பியாவிலிருந்து விஞ்ஞான நிலைக்கு உயர்த்தினார்.

கனவுலக
அறிவியலுக்கு

18ஆம் நூற்றாண்டிலேயே வரலாற்றை ஓர் எதார்த்தபூர்வான வளர்ச்சிப் போக்காக பொருள்-