பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

வருங்கால மானிட சமுதாயம்


முடியும்; எனினும் அவை அதன் இருப்பு, வளர்ச்சி ஆகியவற்றின் முறைகளோடும் நடைமுறைக்குகந்த பாடுகளோடும் இணைந்து பொருந்தியிருக்கவேண்டும். சமுதாய வாழ்க்கையின் உண்மை நிலைமைகளைக் கருத்தில் கொள்வதே பொருள் முதலியல் வரலாற்று விளக்கத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது.

இது மிகவும் எளிதாகத் தோன்றலாம். உண்மையில் பொருள் முதலியல் வரலாற்று விளக்கமானது முதன் முதலாக மக்கள் எல்லோருக்கும் உண்ண உணவும் உடுத்தத் துணியும் கிட்டவேண்டும், எல்லோரும் வாழ்வின் பொருளியல் தேவைகளைப் பெற்றாக வேண்டும் என்ற எளிய உண்மையைத்தான் கூறுகிறது. பொருளியல் தேவைகளைப் பெற்றாக வேண்டும் என்ற எளிய உண்மையைத்தான் கூறுகிறது. பொருளியல் செல்வங்களின் ஆக்கத்தையும் பகிர்வையும் முறைப்படுத்தும் பொருளியல் உறவுகளில்தான் வாழ்க்கையின் அடிப்படை அமைந்திருக்கிறது. இந்த உறவுகளே சமுதாயத்தில் வகுப்புகள் இருப்பதையும் இல்லாதிருப்பதையும் உறுதி செய்கிறது. பொருளியல் உறவுகள் சகல அரசாங்க, சட்ட உறவுகளையும், அதே போல் ஒவ்வொரு வரலாற்றுச் காலத்தில் மெய்யியல், சமய நல்லொழுக்கக் கருத்துகளையும், பிற கருத்துகளையும் உருவாக்கும் கூறாக உண்மையில் விளங்குகின்றன. மனிதரின் மனவுணர்வு அவர்களின் வாழ்க்கையை உறுதிசெய்யவில்லை; மாறாக, அவர்களது வாழ்க்கையை உறுதி செய்கின்றது. காட்டாக, ஆண்டானுக்கு முற்றிலும் உரிமையான உடைமைப் பொருளாக மாந்தனை மாற்றும் அடிமைமுறையை நமது காலத்தில் மாந்த வகுப்பில் மிகப் பெரும்பாலோர் , மேல் வர்க்கங்களை சேர்ந்தவர்களும் கூட , மனித இயல்புக்கே மாறானது என்று கருதுகின்றனர் : அடிமை முறைக்கு ஆதரவான பேச்சுரையே தாழ்வானது என்று கருதப்படுகிறது. எனினும் அடிமை கருதப்படுகிறது. எனினும்