பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

51


அடிமைகளை வைத்திருக்கும் சமுதாய அமைப்பில் அடிமைத்தனத்தின் "இயல்புத் தன்மை" முற்போக் கானவர்கள் இடையிலும் கூட எந்தச் சிக்கலையும் எழுப்பவில்லை; அடிமைகளை வைத்திருப்பது அப்போதைய வாழ்க்கை முறையாக இருந்தது.

மக்கள் எந்தக் கருவிகளைக் கொண்டு இயற்கையின்மீது செல்வாக்கைப் பயன்படுத்து கின்றார்களோ, அதனை மாற்றியமைக்கின்றார்களோ, அதன் மூலம் தமது வாழ்க்கையின் பொருளியல் நிலைமைகளை உருவாக்குகின்றார்களோ, அந்தச் கருவிகளின் இயல்பு, வளர்ச்சிநிலை ஆகியவற்றைத் தான். அதாவது சமுதாயத்தின் விளவு ஆற்றல்களைத் தான் பொருளியல் உறவுகளும் சார்ந்து நிற்கின்றன. எடுத்துக் காட்டாக, கற்காலத்தைச் சேர்ந்த மனிதர்கள் தமது உயிர் வாழ்க்கைக்குத் தேவையான எளிய உணவைக் கூடக் கருவிகளைக் கொண்டே பெற்றுவந்த காலத்தில் (அதுவும் கூட சமுதாயத்தின் அனைத்து உறுப்பினர்கள் சேர்ந்து உழைத்தால் தான் வெற்றியாயிருந்த காலத்தில்), அவர்கள் தம்மிடம் கைதியாகி விட்ட ஒருவனை அடமையாக்க வேண்டும் என்று முயன்றிருந்தால், அந்த அடிமை ஐந்து நாள்கள் கூட உயிர் வாழ்ந்திருக்க மாட்டான். ஏனெனில் சமுதாய உறவின் அடிப்படை வடிவமாக அடிமைமுறை மாறுவதற்கு, உயிர்வாழ்க்கைக்குத் தேவையான பயன்பட்டுப் பண்டங்களின் குறைந்த அளவு தேவைக்குமேல் குறைந்த அளவு உபரிப் பண்டங்களையேனும் சமுதாயம் வழங்க வேண்டிருந்தது; இல்லையெனில் அந்த அடிமை பட்டினியால் மாண்டிருப்பான். சமுதாய உறவுகள், அவை எந்த வகையைச் சேர்ந்தனவாயினும், எப்போதும் ஆக்கத்தியின் நிலையையே சார்ந்திருக்கின்றன.

சமுதாய வளர்ச்சி அதனை உருவாக்கும் கூறுகளின் செயலெதிர்ச் செயலில்தான் அடங்கியுள்ளது. வரலாற்று