பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

வருங்கால மானிட சமுதாயம்


வளர்ச்சிப் போக்கில் ஆன்மிக கூறும் பொருளியல் பங்கைக் காட்டிலும் முதன்மை நிலை குறைந்ததன்று. ஆனால் அவற்றின் செயலெதிர்ச் செயல் பொருளியல் வளர்ச்சியின் அடிப்படையில் தான்் அமைந்துள்ளது. இங்கு தான் அனைத்துச் சமுதாய மாறுதல்களுக்கும் அரசியல் மாறுதல்களுக்கும் உரிய காரணங்களின் இறுதியான விளக்கம் அடங்கியுள்ளது. நடப்பில் இருந்து வரும் சமுதாய உறவுகளின் அறிவுக் கொவ்வாத் தன்மையையும் முறைகேட்டை உணர்ந்தறிவது என்பதே, பழைய பொருளியல் "அளவு கோலால்" அளந்து பார்க்கப்பட்ட சமுதாய அமைப்போடு, இனியும் பொருந்தி வராது போகும் அத்தகைய படைப்பு முறை மாற்றங்களின் விளைவாகத் தான் தோன்றுகின்றது.

சமுதாய வளர்ச்சியில் ஒவ்வொரு சமுதாயமும் ஒன்றையடுத்து ஒன்றாய்த் திட்வட்டமான வரிசை முறையில் உண்மையாக இடம்பெற்று வந்த முதன்மைக் காலகட்டங்களை இனங்கண்டு தெளிவதை, பொருள் முதலியல் வரலாற்று விளக்கம் உறுதியாக்கிற்று. அந்தக் காலப் பகுதிகள் சமுதாய -பொருளியல் அமைப்புகள் எனக் கூறப்படுகினறன. அவற்றில் ஐந்து வகையுண்டு. அவை: தொல்பழங்காலக் கூட்டுக் குடும்ப அமைப்பு; அடிமைச் சமுதாய அமைப்பு: பெருநிலக்கிழமை; முதலாளியம்; பொதுவுடைமை.

அடுத்தடுத்து வரும் ஒவ்வொரு அமைப்பும் ஆக்க வளர்ச்சிக்கு மேலும் வாய்ப்பான ஆக்கப் பாடுகளை வழங்குகின்றது, மேலும் உயர்நிலையான உழைப்பின் விளைவாற்றலைப் பெறவும், சமுதாயத்தை மேலும் வளம் பெறச் செய்யவும் ஆற்றல் படைத்துள்ளது என்ற காரணத்தால் தான் ஒரு சமுதாய - பொருளியல் அமைப்பை நீக்கி விட்டு, அதன் இடத்தில் புதிய அமைப்பு இடம் பெற நேர்கிறது. சான்றாக, புற நிலை உண்மை