பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

53


முறைகளுக் கேற்பவே ஒரு நிலக்கிழமையை நீக்கி விட்டு முதலாளியம் இடம் பெற்றது. ஏனெனில் நிலக்கிழமையின் கீழிருந்த அங்காடிப் பொருள் உறவுகளின் வளர்ச்சி கூட்டுறவையும், பெருவாரி விளைவையும் தோற்றுவித்தது. இதனால் உரிமை மிக்க உழைப்பாளிகளுக்கான தேவை பிறந்தது; அதே நேரத்திலோ நிலமும், அதன் இயற்கைச் செல்வமும், நிலத்தை உழுது பயிரிடுவோர் கூட்டமும்கூட நிலக்கிழார்களின் உடைமையாகவே இருந்தன. எனவே நிலத்தின் மீதிருந்த நில மேலாண்மைச் சொத்துரிமையை ஒழிப்பதும், அடிப்படைப் பொருள்களின் பெருக்கத்தை அதிகரிக்கச் செய்வதற்காகப் பண்ணையடிமையை ஒழிப்பதும் இன்றியமையாததாயிற்று. வெகு மக்களின் ஆதரவோடு முதலாளிகள் பண்ணையடிமையத்தை ஒழித்தனர்; இதனால் உரிமைமிக்க தொழில் வளர்ச்சியும் உழைப்பாளிகளைக் கூலிக்கமர்த்தும் முறையும் தோன்றின. முதலாளிகள் வெற்றி பெற்றனர்; ஏனெனில் அந்தக் காலத்தில் அவர்களது குறிக்கோள்கள் புறநிலை நடப்போடும், வரலாற்று வளர்ச்சியின் நடைமுறைப் போக்கோடும் ஒத்திருந்தன.

எந்த ஒரு புதிய அமைப்பும் பழைய அமைப்பைத் தானே நீக்கிவிட்டு வந்து விடுவதில்லை, ஆனால், அந்தப் புதிய அமைப்பின் தோற்றமே படைப்பாற்றல்களின் குணத்தாலும் வளர்ச்சி நிலையாலும் தான் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக் காட்டியாக வேண்டும். சமுதாய வளர்ச்சியின் அடுத்த கட்டத்துக்கான நிலைமைகள் முந்திய அமைப்பின் வரம்புக்குள்ளேயே தோன்றி விடுகின்றன.

சமுதாய - பொருளியல் அமைப்புகளின் வளர்ச்சியைப் புரிந்து கொண்டதான்து, வரலாற்று வளர்ச்சிப் போக்கின் ஒருமைத் தன்மையைப் புலப்படுத்துவதை முடிவாக்கிற்று, எந்த மக்களின்