பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

வருங்கால மானிட சமுதாயம்


வரலாறும் பெருமளவுக்குத் தனித் தன்மை வாய்ந்தது என்பது உண்மையே. சான்றாக, பல்வேறு நாடுகளின் முதலாளிய அமைப்பை அலசிப் பார்த்தால் இது தெளிவாகத் தெரியவரும். ஆனால் அந்த நாடுகளின் அடிப்படையான நிலைமைகள் முதலாளியத்தையும் அதன் பொருளியல் உறவுகளையும்தான் முகவாண்மைப் - படுத்துகின்றன; அவற்றின் சிறப்புத் தன்மைகளான ஆக்கக் கருவிகளின் உடைமை, பகிர்வு, வகுப்பு உறவுகள் ஆகியவற்றின் வடிவங்கள் திட்டவட்டமாக முதலாளியக் குணத்தையே பெற்றிருக்கின்றன. அமெரிக்க ஒன்றிய நாடுகள்,செருமனி கூட்டுக் குடியரசு, பிரிட்டன், இசுபெயின், சப்பான் அல்லது தென் ஆப்பிரிக்கக் குடியரசு முதலிய எந்தவொரு முதலாளிய நாட்டிலும் ஆக்கக் கருவிகள் முதலாளிகளுக்கே உரிமையாக உள்ளன; பகிர்வு, எல்லாவற்றுக்கும் மேலாக முதலீடு செய்யப்பட்ட முதலீட்டின் அளவையே சார்ந்துள்ளது; முதலளிகளுக்கெதிரான பாட்டாளிகளின் போராட்டம் அங்கு என்றும் ஓய்வதில்லை.

அனைத்து முதலாளிய நாடுகளிலும் வளர்ச்சியின் நடைமுறையிலான முடிவுகளை தீர்மானிக்கும் பொருளியல் நிலைமைகள் ஒன்று போலவே இருப்பதால், இந்த நிலைமைகளைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, எந்தவொரு முதலாளிய நாட்டின் உடனடியான எதிர்காலமும்கூட அடிப்படையில் ஒன்று போலத்தான் இருக்கின்றது.

ஒரு நாட்டு மக்களின் அடிப்படையான வரலாறு எண்ணிறந்த கூறுகளைச் சார்ந்ததாகும் என்பது சொல்லாமலே விளங்கும். நிலவியல் நிலைமைகள், வண்ண இன தேசிய இன உறவுகள், சமைய ஆட்சியின் அளவு, வரலாற்று வகையான பல்வேறு செல்வாக்குகள் ஆகியவற்றோடு, பல்வேறு பொதுமக்கள் இயக்கங்களை