பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

55


முன்னின்று நடத்துவோரின் குணக்கூறுகள் ஆகியவையும் அந்த உரிமைப்பங்காகும். எனவே பல்வேறு மக்களின் வரலாற்ற வளர்ச்சியில் முழுநிறை ஒருமைத் தன்மை என்பது இருக்க முடியாது.

எவ்வாறாயினும், ஒரு நாட்டின் வளர்ச்சி அதன் நுணுக்க விளக்கங்களிலும் போக்குகளிலும் எவ்வளவு சிறப்புத் தன்மை பெற்றிருந்தபோதிலும், வரலாற்று வளர்ச்சியின் திசைவழியானது மனிதகுலம் முழுமைக்கும் பொதுவானதேயாகும்.

ஆக்க வளர்ச்சியிலும், ஒரு வகை படைப்பு முறைக்கு வேறாக மறுவகை படைப்புமுறை நடைமுறையில் இடம் பெறுவதிலும்தான் வரலாற்று வளர்ச்சியின் மிக ஆழமான சாறாம் அடங்கியுள்ளது.

மார்க்சு கூறிய மிகை மதிப்பின் முறைமை முதலாளிய சுரண்டலின் திறமையை வெளிப்படுத்தியது: முதலாளிய ஆக்க முறையில், படைப்புக் கருவிகளின் உடைமை யாளனான முதலாளி தொழிலாளியின் உழைப்பில் ஒரு பங்கை, அதற்கு எந்தவிதக் கூலியும் கொடுக்காமலே, தனக்கு உரிமையாக்கிக் கொள்கிறான். என்றென்றும் வளர்ந்தோங்கும் தனது ஆக்க வேட்கையைத் தணித்துக் கொள்ள முதலாளி எந்த வழியைக் கடைப்பிடிக்கிறான் என்பதை மிகை மதிப்பின் முறை புரிய வைத்தது. ஊதியம் அளிக்காத மிகை உழைப்பின் அளவை அதிகரித்துக் கொண்டு போவதே அந்த வழியாகும்.

முதலாளியத்தின் கீழ் சுரண்டலை ஒழித்துக் கட்டுவதென்பது இயலாத செயல். மேன்மேலும் ஊதியம் பெறுவதற்கு நிரந்தமாகப் பாடுபடுவதை முதலாளியம் தோற்றுவிக்கிறது. இது நிலையான முயற்சிதான். ஏனெனில் மேலும் மேலும் ஊதியத்தைப் பெருக்கிக் கொண்டு போனால்தான் முதலாளி எதிர்நிலையைச் எதிர்த்து நிற்க முடியும். மேலும் முதலாளியம்