பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

வருங்கால மானிட சமுதாயம்


சுரண்டலுக்கான "நாட்டு எல்லைகளையும்" தவிர்க்கொணாத வண்ணம் விரிக்கின்றது. பிற தேயங்களை, வலுவற்ற நாடுகளை அடிமைப் படுத்தும் போக்கு, அதாவது உலக ஆதிக்கத்துக்குப் பாடது அதனுள் உள்ளார்ந்து உறைந்திருக்கிறது.

எனவேதான் படைப்புக் கருவிகளில் தனியார் உடைமையைக் கட்டிக் காத்துவரும் நிலைமைகளின் கீழ் சமன்மை குறிக்கோள்களை நனவாக்குவதற்கான திட்டங்கள் நடைமுறைக்குப் புறம்பானவையாயுள்ளன.

பாட்டாளி இனமும் அவர்களோடு ஒன்றுபட்டி ருக்கும் அனைத்து உழைக்கும் மக்களும் தமது வகுப்புப் போராட்டப் போக்கின்போது, தமது வர்த்த நலம்களுக்கும் நடப்பில் இருந்துவரும் சமுதாய உறவுகளுக்கும் இடையேயுள்ள முரண்பாட்டை மேன்மேலும் தெள்ளத் தெளிவாகக் கண்டுணர்கின்றனர். இதன் விளைவாக, மனிதனை மனிதன் சுரண்டும் சரண்டலையும் ஒடுக்குமுறையையும் ஒழித்துக் கட்டும் திசை வழியில் அவர்கள் தமது முயற்சிகளைச் செலுத்துகின்றனர்.

பொருள் முதல் வரலாற்று விளக்கமும், வெளியாகி விட்ட முதலாளிய விளைவு முறையின் சாறம் தான் பொதுவுடைமையை அறிவியல் ஆக்குவதற்கு உதவின.

அறிவியல் பொதுவுடைமையின் வரலாற்றுக் குணமே, அதற்கும் அதற்கு முந்திய ஏனைய எல்லா சமன்மைக் கொள்கைகளுக்கும் இடையே தென்படும் முதல் வேறு பாடாகும். சமுதாயம் பொதுவுடைமைக்கு மாறுவது ஒரு தருக்கமுறையான வளர்ச்சிப் போக்கு என்ற, அத்தகைய மாற்றத்துக்கான ஆக்கப்படம் இன்றியமையாமும் அதற்கு முந்திய சமுதாய அமைப்பிலேயே உருவாகி விடுகின்றன என்ற மறுக்க முடியாத உண்மையோடுதான், கனவுலகை அறிவியலாக