பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

57


மாற்றும் பணி தொடங்கியது. உண்மையில் பொதுவுடைமையை நிறுவுவதென்பது பொருளியல் தன்மை கொண்டதே. கம்யூனிச சமுதாயம் முதலாளியம் உண்டாக்கிவிட்ட நிலைமைகளால் தான் உருவாகிறது.

முதலாளியத்தை நீக்கிவிட்டுக் பொதுவுடைமை இடம் பெறுவதன் தவிர்க்கொணாத பொருளியல்த் தன்மையானது, முதலாளிய விளைவாக்க திட்ட வட்டமான சமுதாயத் தன்மையைப் பெற்றிருக்கும் உண்மையில்தான் முதன் முதலாக அடங்கியுள்ளது. உண்மையில் முதலாளியத்தின் கீழ் உழைப்பால் உருவான எந்த ஆக்கம் செய்யப்பட்டதாயினும் கூட, கூட்டு உழைப்பின் மூலம் விளைவாக்கம் செய்த பொருளாகத்தான் உள்ளது -அதாவது அந்தப் பொருள் ஏனைய தொழிலாளர்கள் அல்லது உழவர்கள் படைத்துத் தந்த மூலப் பொருளிலிருந்து, ஏனையோர் கட்டி முடித்த எந்திரத்தின் உதவியினாலும், இன்னும் பலர் விளைவு செய்து தரும் மின்விசையாலும் ஆக்கமாகும் பண்டமாகவே உள்ளது. சிதைக்க முடியாத, கண்கண்ட, காண்காணாத பிணைப்புகளால் பல்வேறு தொழில்களும் அதில் ஒன்றோடான்று பிணைக்கப்பட்டுள்ளது.

அனைத்து வகையான விளைவாக்க ஆற்றல் களையும் பயன் படுத்தி, சமுதாய ஆக்கத்தை இயல்பாக நடைபெறச் செய்வது, அதனை வளர்ப்பது, நெருக்கடிகளும் தேக்கமும் இல்லாதிருப்பது என்பவை யெல்லாம், முதலாளியத்தின் கீழ் சாத்தியமே இல்லை; ஏனெனில் அதில் உழைப்பின் பயன்களை படைப்புக் கருவிகளின் உடைமையாளர்கள் தனிப்படத் தமக்கு உரிமையாக்கிக் கொள்கின்றனர். எனவே தனியார் உடைமையை அகற்றிச் சமுதாய உமைமையைக் கொண்டு வருவது தான் உற்பத்தியின் சகஜமான வளர்ச்சிக்கான ஆரம்பத் தேவைக் கூறுகளை உறுதி செய்ய முடியும்.