பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நிகழ்காலம்

னித வளர்ச்சி பற்றியும் மானிட எதிர்காலம் பற்றியும் மனிதன் சிந்திக்கிறான். காரணம் சிந்திக்கத் தெரிவதால்.

உலக முழுதும் சிந்தனையாளர்கள் எண்ணங்களின் வெளிப்பாடே நாகரிக வளர்ச்சியாகவும் பண்பாட்டின் வெளிப்பாடகவும் முகிழ்வதே இவ் உலகம். சாக்ரடிசு முதல் - சாத்தரே வரை - வள்ளுவர் முதல் வள்ளலார் வரை - மானுடத்தை உயர்த்தி தம்மையே தியாகம் செய்துள்ளனர்.

ஏர் பிடிக்கும் பாட்டாளி முதல் எழுதுகோல் பிடிக்கும் கருத்தாளர்கள் பலர் எதிர்காலம் - எதிர்காலம் தம் எண்ணங்களைத் தந்துள்ளனர். அவ்வகையில் இந்நூலும் ஒன்று.தமிழர்க்கும் இந்தியர்க்கும் இந்நூல் ஒர் உந்தாற்றலாகும். மக்கள் எதிர்காலத்தைக் காண்க. கொண்டிருக.

அன்பன்

எல். ஆர். வேலாயுதம்