பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

வருங்கால மானிட சமுதாயம்



சமுதாய உடைமையை நிறுவுவதான்து முதலீட்டை ஒன்று குவிப்பதையும் நடுமைப்படுத்துவதையும் நிறைவு பெறச் செய்கிறது என்பதும் குறிப்பிடத் தக்கதாகும். இந்த வளர்ச்சிப் போக்கு முதலாளிய வளர்ச்சியின் ஏரணவகையின் விளைவாகவே, முதன்மையாக முதலாளியப் போட்டி முறையின் விளைவாகவே, முதலாளிய ஆக்க முறைக்குள்ளேயே பொங்கிவந்து கொண்டிருந்த ஒரு போக்குத்தான். விளைவாகக் கருவி களின் தனியார் உடைமையை அகற்றிச் சமுதாய உடைமையை ஏற்படுத்துவது சமுதாய வளர்ச்சியில் ஒரு பண்பு மாற்றத்தைக் குறிக்கின்றது; அதன்முன், பரந்துபட்ட வரலாற்று வாய்ப்புக்களைத் தோற்றுவிக்கிறது.

கருத்தியல் நாடுகள் முட்டி மோதி நிலைகுத்தி நின்றுவிட்ட இடத்தில், அறிவியல் பொதுவுடைமை வெற்றி பெற்றுவிட்டது. கனவுலகுகளெல்லாம் முதலாளிய உறவுகளை ஆய்வு செய்தன; ஆனால் அவற்றைப் புரிந்து கொள்ளவோ, அல்லது முறையான சமுதாய மொன்றை உருவாக்கும் நடைமுறை சார்ந்த வழிகளைக் கண்டறியவோ அவற்றால் இயலவில்லை. சமுதாய அமைப்பைப் பொறுத்தவரையிலும் நன்னெறி அறிவுரை செய்வதை அறிவியல் பொதுவுடைமைக் கோட்பாடு தீர்த்துக் கட்டிவிட்டது. குறிப்பிட்ட வரலாற்றுக் கால கட்டம் வரையிலும் முதலாளியம் இருந்தே தீரும் என்பதையும், எனவே அதனை மிகவும் முற்போக் கானதொரு சமுதாய - பொருளியல் அமைப்பினால் அகற்றுவதும் தவிர்க்கொணாதது என்பதையும் அது மெய்ப்பித்தது.

முதலாளியம் பொதுவுடைமைக்கான அடிப் படையை நிறுவியது; ஏனெனில் விளைவாக்கத்தை வளர்ப்பதன் மூலம், அது உரிமைக்கும் சமன்மைக்குமான