பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

வருங்கால மானிட சமுதாயம்


தவறாகும், இரண்டாம் உலக போருக்குப் பின்னர் பல முதலாளிய நாடுகளில் கணிசமான விளைவாக்க வளர்ச்சி தென்பட்டுள்ளது; அத்துடன் உழைப்பின்விளைவுகளும் உழைப்பு முறைகளும், ஆக்கத்தின் தொழில் நுட்பச் செய்முறைகளும், கருவிகளும் அங்கு புதுமை மயமாக்கப் பட்டுள்ளன. இதனைப் பல்வேறு சூழ்நிலைகளின் மூலம் விளக்கவேண்டும்; உலக அங்காடியில் தனித்தோங்கிய முதலாளிகளுக்கிடையே நடைபெறும் கடுமையான எதிர்நிலை, தன்னிச்சையான பொருளியல் வளர்ச்சிப் பாதையைத் தேர்ந்தெடுக்துள்ள புதிதாக வளர்ந்து வரும் இளம் நாடுகளின் மீது பொருளியல், அரசியல் செல்வாக்கைச் செலுத்த அவர்கள் நடத்தும் போராட்டம், தொடர்ச்சியான படைப்பெருக்கப் போட்டி ஆகியவையே அச் சூழ்நிலைகளாகும்.

எனினும், இவையெல்லாம் தாற்காலிகமான தன்மைகள் தாம். ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் இலத்தீன் அமெரிக்காவிலும் உள்ள இளம் நாடுகள் எய்தியுள்ள பொருளியல் முன்னேற்றமானது உலக அங்காடியில் முதலாளியத்தின் முடிக்கத்தக்கத் தீவிரமாகக் குறைக்கும். சமன்மைக் கூட்டுக் குடும்பம் வளர வளர, அது தன்னிச்சையான இளம் அரசுகளுக்குத் தான் அளித்துவரும் உதவியை அமைதியாக அதிகரிக்கும்; இது தனி வல்லாட்சி அரசுகளுக்கு இன்னும் பெரிய தொல்லைகளை விளைவிக்கும்.

தொகுத்துச் சொல்வோம்; உழைப்பின் விளைவாக்க ஆற்றல் குறைவாக இருந்து, அது உயிர் வாழ்க்கைகுத் தேவையான பொருள்களை மிகமிகக் குறைந்த அளவில் மிகுதியாக விளைவு செய்து வந்தபோது, மாந்தனை மனிதன் சுரண்டும் சுரண்டல் இருந்தால் தான் பொருளியலை வளர்க்க முடிந்தது. முதலாளியத்திலோ, பொருளியல் வளர்ச்சி ஒரு கட்டத்தை எய்துகிறது.