பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

61


முதலாவதாக, அதில் உழைக்கும் மக்கள் ஆலைகளிலும் தொழிற் சாலைகளிலும் வேலை பார்ப்பதோடு, அரசியல் நடைமுறைகளிலும் பங்கெடுக்க முடிகிறது; இரண்டாவதாக, சமுதாயத்தின், அனைத்து மக்களின் நிலையான வளர்ந்தோங்கும் தேவைகளைப் நிறைவு செய்யும் நோக்கத்தைப் பெற்றிராத முதலாளிய விளைவாக்கம், தான்் தோற்றுவிக்கும் விளைவாக்க ஆற்றலையே தவிர்க்கொணாத வண்ணம் கட்டுப்படுத் துகிறது. மூன்றாவதாக, ஆக்கத்தின் சமுதாயத் தன்மைக்கும், தனியாரின் செல்வச் சேமிப்புக்கும் இடையே முதலாளியத்தின் கீழ் முற்றி வரும் மோதலை, அதைக் காட்டிலும் மேம்பட்ட சமுதாய அமைப்புக்கு மாறுவதன் மூலமே தீர்க்க முடியும்.

நிலவுக் கோள்மறைப்பின் வருகையைத் விரைவு
படுத்துவதற்கென்று எவரும் ஏன் ஒரு கட்சியைத் தோற்றுவிப்பதில்லை?

19ஆம் நூற்றாண்டில் மெய்யியல் வாணரும் அறநூலாசிரியருமான உருடால்ப் இசுடாம்லெர் இந்த வினாவை மார்க்சியத்துக்கு எதிரான கருத்தாகவே பயன்படத்தினார். பொருள் முதல் வரலாற்று விளக்க நிலையிலிருந்து பொருளாயமும் சட்டமும் என்ற தமது நூலில், பொதுவுடைமைக்கு மாறும் மாற்றம் தவிர்க்க முடியாதது எனக் கூறும் மார்க்சியவாதிகள், அந்த மாற்றத்தைத் விரைவுப் படுத்துவதும் தேவை என்று கருதுவதன் பொருளைப் புரியமாட்டாது திகைத்தார் இசுடாம்லெர். வானவியலின்படி தவிர்க்கொணத வண்ணம் நிகழும் நிலவுக்கோள் மறைப்பை விரைவுபடுத்த ஒரு கட்சியை உருவாக்கத் துணிவதுபோல், இதுவும் அத்தனை வியப்பானதொரு செய்கைதான் என்று அவர் கூறுகிறார்.

அன்று தொட்டு இது பலருக்குப் பிடித்தமான கருத்தாக இருந்து வந்துள்ளது. இன்றும் கூட அறிவியல்