பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

வருங்கால மானிட சமுதாயம்


பொதுவுடைமைக் கொள்கையை திறனாய்பவர்கள், இந்தக் கொள்கையின் ஏரணவகையில் "பொருந்தாத் தன்மை"யை மெய்ப்பிக்கும் முயற்சிகளில் இந்த கருத்தைப் பயன்படுத்துகின்றனர். வரலாறு பொருள் முதல் முறையில் தீர்மானிக்கப்படுகிறது. (அதாவது வரலாறு நடைமுறை முறைகளுக் கேற்ப வளர்ச்சி பெறுகிறது) என்ற கொள்கை, புரட்சிமீது வைக்கும் நம்பிக்கையோடு பொருந்திப் போகவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர். ஏனெனில் பொதுவுடைமை உண்மையிலேயே வெற்றி பெறுமானால், நிலவுக்கோள் மறைப்பு வருவதைப் போல், இரவை அடுத்துப் பகல் வருவதைப்போல், வேனிலுக்குப் பின் கோடை வருவதைப்போல் அதுவும் எந்தவொரு புரட்சியோ போராட்டமோ இல்லாமலே நிறுவப்படும் என்று அந்த திறனிகள் கூறுகின்றனர். .

சமுதாயம் பொதுவுடைமைக்கு மாறிச் செல்லும் இன்றியமையாமையை மறுப்பதற்காகவே இக் கருத்து கூறப்படுகிறது என்பது சொல்லாமலே விளங்கும். மேலும் இதன்பின் அடங்கியுள்ள பொருள் இதுதான்: மார்க்சிய வாதிகளே பொதுவுடைமையின் நடப்பியல் தேவையை நம்பவில்லை; அவர்கள் அதனை வகுப்புப் போராட்டத்தோடும் புரட்சியோடும், அதாவது மாந்த இனச் செயலாற்றலோடும் தொடர்புபடுத்துவதற்கு இதுதான்் காரணம்.இத்தகைய சிந்தனையைப் பின்பற்றிச் சென்றால், மூரையும் காம்பனெல்லாவின் பயணியர் களையும் போன்று மார்க்சியவாணர்களும் கருத்தியல்வாணர்கள்தான் என்றும், அவர்களும் கற்பனை நலத்தில்தான் ஈடுபட்டுள்ளனர் என்றும் முடிவுக்கு வருவது மிகவும் எளிது. இறுதியாக, மார்க்சியத்துக்குத் தொளைநோக்குக் கூடக் கிடையாது என மறுப்பதும், வருங்கால அறிவியலை உருவாக்க முயலும் எந்தவொரு முயற்சியையும் கற்பமனை கருத்தென ஒதுக்கித் தள்ளுவதும் எளிதாகிவிடும்.