பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

63


உண்மையில் இந்தக் பொதுவுடைமை பகைமை கோட்பாட்டினர்கள் மிகவும் விரைபட்டு விடுகிறார்கள்!

இருநூறு ஆண்டகட்குமுன் பிரித்தான்ிய மெய்யியல் வாணியும் வேதியல் அறிஞருமான சோசப் பிரீசுட்லி தவிர்க்க முடியாது நிகழும் சில நிகழ்ச்சிகள், அவற்றில் மாந்தனும் பங்குபெறும் முயற்சிநிலை முற்றிலும் விலக்கி விடுவதில்லை என்று எழுதினார். கவனியுங்கள் - இது பொதுவுடைமைக் கருத்தைச் சிறிதும் கருதிப் பார்க்காது எழுதியதாகும்; அக் கருத்தை நிறை வேற்றுவதற்கான உண்மையான முயற்சிநிலை தோன்றுவதற்கு நெடுங் காலத்துக்கு முன்பே எழுதியதாகும். காரண காரியச் சங்கிலித்தொடரில் மனித நடவடிக்கைகள் ஒர் இன்றியமையாத வளையமாக விளங்குகின்றன; இந்தக் காரணத்தால் நிகழ்வுகளின் விளைவுகள் பெரும்பாலும் மாந்தர்களையே சார்ந்துள்ளன.

நிலவின் இடத்தையும் இயக்கத்தையும் பொறுத்த நிலவுக் கோள்மறைவு, இரவும் பகலும் மாறி மாறி வருந் தோற்றம், ஆண்டுதோறும் வரும் பருவங்கள் முதலிய நிகழ்ச்சிப் போக்குகளும் காட்சி உண்மைகளும் இயல்பாகவே மாந்தர்களைச் சார்ந்திருக்க வில்லை; அவற்றை விரைவுப் படுத்தவதற்குக் கட்சிகள் நிறுவுவது. அறியாமையேயாகும்.

எனினும் இயற்கையின் நிகழ்ச்சிப் போக்குகளைப் புரிந்து கொள்ளும்போதே, மக்கள் பெரும்பாலும் அவற்றைக் கட்டுப் படுத்துகிறார்கள் என்பதும், அதன் மூலம் நல்ல பலனை அதிகரிக்கவும் கெட்ட விளைவைக் கூடியவரையில் குறைக்கவும் செய்கிறார்கள் என்பதும் உண்மை.

சமுதாய நிகழ்ச்சிப் போக்குகளோ முற்றிலும் வேறு வகையானவை. மக்கள் இல்லாது எந்தச் சமுதாயமும் கிடையாது. மக்களோ மன உணர்வு படைத்த பிறவிகள்;