பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

வருங்கால மானிட சமுதாயம்


செயலாற்றும் திறமை கொண்டவர்கள். மாந்த இன மன உணர்வும் மக்களது நடவடிக்கைகளின் தன்மையும் அவர்களது சமுதாய வாழ்க்கையின் விளைவுதான்் என்றாலும், வரலாற்று முறைமைகளை எய்தும் வளர்ச்சிப் போக்கில் மக்களும் ஒர் இன்றியமையாத கூறாகத் திகழ்கின்றனர். உண்மையில் மக்கள் கருத்துகளையும் செயல்களையும் வளர்க்கின்றனர்; ஏனெனில் அவர்களின்றி எந்த வரலாற்று வளர்ச்சிப் போக்கும் இருக்கமுடியாது. வரலாற்று முறைமைகள் ஒரே சமயத்தில் மாந்தர்களின் சமுதாய நடவடிக்கையின் முறைமைகளாகவும் இருக்கின்றன.

ஏதோ மறைபுதிரான விதிவசமான ஆற்றல்களால் அல்லது தனி ஆள்களால் ஆட்டி வைக்கப்பெறும் பொம்மைகளைப்போல் தோற்றுமாறு மாந்தர்களை ஆக்க விரும்பும் இந்த வேட்கைக்கு, ஒருவேளை அவர்களின் நடவடிக்கைகளைப் பற்றிய அச்சமே காரணம் என்றும் சொல்லலாம்.

வரலாற்றில் பொது மக்களே சிறப்பான உந்தாற்றலாக விளங்குகின்றனர் என்பதை எண்ணற்ற சான்றுகள் மெய்ப்பிக்கின்றன. இந்தக் கருத்து தனி ஆள்களின் பங்கை, பெரிய புகழாளர்களின் பங்கை மட்டுமல்லாமல் ஒவ்வொரு தனி ஆளின் பங்கையும் கூட, விலக்கி விடவில்லை. எனினும் தனி ஆள்களின் முயற்சிகள் வெள்ளம்போல் ஒன்று திரண்டால் மட்டுமே, சமுதாய முறையில் முதன்மை வாய்ந்த பலன் விளைகின்றது. மேலும் இவ்வாறு ஒன்று திரளும் சாத்தியப்பாட்டை வரலாற்று நிகழ்ச்சிப் போக்கின் நடைமுறைகள் தான்் உறுதி செய்கின்றன.

எப்போது வகுப்புகள் தோன்றியதோ அப்போது முதற்கொண்டே வகுப்புப்போராட்டம் பொதுமக்கள் நடவடிக்கையின் மிக முதன்மையான வடிவமாக இருந்து வந்திருக்கிறது. பொதுவுடைமையின் கண்கண்ட