பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

65


தோற்றம் அதற்கு முந்திய முதலாளித்துவ சமுதாயத்தின் வளர்ச்சியிலிருந்து தோன்றியபோதிலும், முதலாளி களுக்கு எதிராக பொது மக்களும் நடத்தும் வகுப்புப் போராட்டத்தை வளர்த்துச் செல்வதன் மூலமே அதனை எய்த முடியும்.

கம்யூனிச சமுதாயத்தின் அமைப்பாளராக விளங்கும் பாட்டாளி வகுப்பின் வரலாற்றுப் பங்கை நிறுவிக் காட்டியது அறிவியல் பொதுவுடைமையின் இரண்டாவது பெருங் கண்டுபிடிப்பாகும். இந்தக் கொள்கையின் படி, உழைப்பாளி வகுப்பின் விடுதலையை உழைப்பாளி வகுப்பேதான்் செயல்படுத்த முடியும்.

பாட்டாளி வகுப்பு தன்னைத் தான்ே விடுவித்துக் கொள்ளும் போதே சமுதாயம் முழுவதையும் விடுதலை பெறச் செய்கிறது. ஏனெனில் அந்த விடுதலை சுரண்டலிலிருந்து விடுதலை பெறுவதாகும்; எனவே விளைவாக்கக் கருவிகளின் தனியார் உடைமையிலிருந்தும் விடுபடுவதாகும். இது மாந்தனை அடிமைப்படுத்தும் சமுதாய நிலைமைகளை ஒழித்து விடுகிறது. எனவேதான்் புதிய சமுதாய அமைப்பின் வெற்றியைக் கொண்டு வருவதற்கு, முதலாளிகளாலும் நிலக் கிழார்களாலும் ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட, சீரழியப் பெற்ற சகல மக்களும்-வேளார்களும், கைவினைத் தொழிலாளர்களும், அலுவலக ஊழியர்களும் பாட்டாளி இனத்தோடு நிலையான உறுதியான கூட்டுறவோடு ஒன்றுபட வேண்டும். -

இந்தக் கூட்டுறவின் வலத்தின்மீதும், இது எந்த

அளவுக்கு பொது மக்களைத் தழுவி நிற்கிறதோ அந்த அளவின் மீதும்தான், மிகவும் முற்போக்கான சமுதாயத்தின் வெற்றி சார்ந்து நிற்கிறது.

முதலாளியத்துக்கு எதிரான போராட்டத்தில் பொதுமக்களைக் கிளர்ந்தெழச்செய்வதற்கும், உழைக்கும்

வ. மா 5