பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

வருங்கால மானிட சமுதாயம்


அத்துடன் அவரவர் திறமைக்கேற்ப உழைப்பு, அவரவர் தேவைக்கேற்ற ஊதியம் என்ற சிறப்பான பொதுவுடைமைக்கோட்பாட்டின் வெற்றிக்கான முக்கிய தேவைக் கூறுகளம் தோன்றி விடுகின்றன.

இவ்வாறாக, பொதுவுடைமை தனது உரிய அடிப்படையில், சமன்மை அடிப்படையில் தோன்றிவிடுகிறது

அறிவியல் பொதுவுடைமைக் கொள்கை பொதுவுடைமை சமுதாய வளர்ச்சியின் இரு கட்டங்களை சமன்மை அடுத்து பொதுவுடைமை என்பனவற்றை வரையறுத்துக் கூறியது; இந்தக கட்டங்களின் தவிர்க்கொணாத தன்மையை நுகர்வறிவு மெய்பித்துள்ளது.

சமன்மையும் பொதுவுடைமையும் ஒரே அமைப்பின் இரு கட்டங்களாக இருப்பதால், இரண்டும் சில பொதுத் தன்மைகளைப் பெற்றுள்ளன. அவை: விளைவாக்க கருவிகளின் சமுதாய உடைமை; சுரண்டும் வகுப்புகளைப் போக்குதல் (எனவே அனைத்து வகையான வகுப்பு, வண்ண இன, தேசிய இன ஒடுக்குமுறையையும் போக்குதல்; ஏனெனில் சுரண்டும் வகுப்புகள் தான்் ஏதாவதொரு வடிவில் ஒடுக்கு முறைக்குக் காரணமாகின்றன); ஆக்க வளர்ச்சியில் தோழமையான கூட்டுறவு, நட்பு முறையான எதிரிடை ஒருவர்க்கொருவர் ஒத்துழைப்பு முதலிய உறவுகள் நிலவுதல்; ஆக்க வளர்ச்சியில் அனைத்து உழைக்கும் மக்களுக்கும் சரிசமமான அக்கறை, சமுதாயத்தின் அனைத்து உறுப்பினர்களின் என்றென்றும் வளர்ந்தோங்கும் பொருளியல், பண்பாட்டுத் தேவைகளை நிறைவு செய்வதற்காகவே பெருக்கத்தைப் பயன்படுத்துவது இந்த நிலைமை தொழில் நுட்ப முன்னேற்ற அடிப்படையில் படைப்பை பெருக்கச் செய்து வளர்ப்பதன் விளைவாய்