பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

69


எய்தப்படுகின்றது; மக்கள் தமக்குத் தாமே புதிய சமூக உறவுகளை உணர்வு முறையில் வளர்த்துக் கொள்வது - இது சமுதாய வளர்ச்சியின் நியதி முறைமைகளை அவர்கள் கண்டுணர்வதிலிருந்து தோன்றுகிறது; பண்பாடு, மார்க்சிய - இலெனினிய கோட்பாட்டின் தலைமை ஆகியவையாகும்.

தனக்கும் சமன்மைக்கும் பொதுவாகவுள்ள தன்மைகளைக் பொதுவுடைமை கணிசமான அளவுக்கு உருமாற்றுகிறது அறிவியல், தொழில் நுட்ப முன்னேற்றம், என்றென்றும் வளர்ந்தோங்கும் உழைப்பின் விளைவாக்க ஆற்றல் ஆகியவற்றின் அடிப்படையில் பொதுவுடைமையின் கீழ் மிகுதியான பொருளியல்ச் செல்வ வளம் உருவாக்கப்படும். இதன் விளைவாக, சமுதாய உறவுகளை மேலும் பெருக்கச் செய்வதற்கான நிலைமகள் வளர்ச்சி பெறும்.

பொதுவுடைமை விளைவாக்க கருவிகளின் உடைமையின் ஒரே வடிவத்தை, அதாவது அனைத்து மக்களுக்கும் உடைமையான ஒரே வடிவத்தைப் பெற்றிருக்கும் சமுதாயமாகும். இந்த வடிவம் உழவர்கள், கைவினைத் தொழிலாளர்கள் முதலிய பெரும் மக்கட் பகுதிகளைக் கொண்ட நாடுகளில் சமன்மையின் கீழ் நிலவிவரும் குழு அல்லது கூட்டுறவு உடைமையையும், போக்கி அதனிடத்தில் இடம் பெறுவதாகும்

சமன்மை ஒன்றுக்கொன்று மாறுபட்ட சமுதாய குழுக்களோ, வகுப்புகளோ இல்லாத சமுதாயமும் ஆகும். கூட்டுடைமை பொது உடைமையின் அடிப்படையில் நகர்ப் புறத்துக்கும் சிற்றுர்ப் புறத்துக்கும் இடையேயுள்ள முதல் வேற்றுமைகளைப் போக்கிவிடும் சமுதாயமாகும்; இதன் விளைவாக, அங்கு வேளாண்மை எந்திரத் தொழில் உழைப்பின் வடிவத்தைப் பெற்று விடும். வரையில் சமுதாயத்தின் பண்பாட்டு வளர்ச்சியும் கிகுந்த்தன்மை வாய்ந்ததாகும்

பொதுவுடைமை விளைவாக்கத்தை ஒழுங்குபடுத்தும் கட்டுப்படுத்தும் செயல்களாக உடலுழைப்பை