பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

வருங்கால மானிட சமுதாயம்


மாற்றி விடும் சமுதாயமாகும் அதில் தொழில் நுட்ப முன்னேற்றம், கல்வி பண்பாட்டு வளர்ச்சி ஆகியவற்றின் விளைவாக, உடல் உழைப்பிலும் மூளை உழைப்பிலும் ஈடுபட்டிருக்கும் மககளுக்கிடையேயுள்ள அடிப்படையான வேற்றுமைகள் மறைந்துவிடும்

பொதுவுடைமை சமுதாயத்தில் உழைப்பு ஒரு சுமையாக இருக்காது, மாறாக, அது மேன்மையான, உயிர்ப்பு மிக்க அவசியாக மாறி விடும்

பொதுவுடைமையில் ஆக்கப் பொருள் அங்காடிச் சரக்குகளாகவும் இருக்காது; எனவே வாணிப உறவுகளும் மறைந்து போய் விடும் ஒரு பொருள் எந்த அளவுககு மக்களின் தேவைகளைப் நிறைவு செய்கிறதோ அந்த அளவே அதன் மதிப்பை அளக்கும் ஒரே அளவுகோலாக விளங்கும் "அவர்தம் திறமைக்கேற்ற உழைப்பு, தேவைக் கேற்ற ஊதியம்" என்ற கோட்பாட்டைக் பொதுவுடைமை நிறைவேற்றும்

பொதுவுடைமை உரிமையும் சமன்மையும் நிலவும் சமுதாயமாகும், அதில் மாந்தன் முழுமையாகவும் இசைவாகவும் வளர்ச்சி பெறவும், தனது தொழிலைச் உரிமையாக மாற்றிக் கொள்ளவும், விளைவாக்கத்தில் ஈடுபடவும் இயலும்

பொதுவுடைமை உலகம் முழுவதிலும் வெற்றி பெறும் போது அரசு வாடி வதங்கி மறைந்து விடும்: அதனிடத்தில் மக்களது பொதுவுடைமை தன்னாட்சி ஏற்படும்; அதாவது "மக்களின் மீது அரசாட்சி" என்ற நிலையைப் "பொருள்களின் மீது அரசாட்சி" என்ற நிலை முற்றிலும் போக்கி விடும்,

பொதுவுடைமை உணர்வும் பொது மக்கள் அபிப்பிராயமுமே மக்களின் நடத்தையை முறைப்படுத்தும் அடிப்படை கூறுகளாகத் திகழும்

பொதுவுடைமையின் கீழ் மாந்தனது என்றும் வளர்ந்தோங்கும் தேவைகளைப் நிறைவு செய்வதே ஆக்கத்தின் நோக்கமாக இருக்கும் காரணத்தால், மேலும்