பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

வருங்கால மானிட சமுதாயம்





(நிகழ்காலம் பற்றி)

பொதுவுடைமையும் வரலாறும்


வ்வொரு அறிவியல் கொள்கையும் அத்தகைய கொள்கைக்குச் சமுதாயத்தில் நெருக்கடியான தேவை இருக்கும் காலத்திலேயே தோன்றுகிறது சமுதாயத்தினுள் நுழைகின்றது என்பதை வரலாறு மெய்பித்துள்ளது இதில் அறிவியல் பொதுவுடைமைக் கொள்கையும் விதி விலக்கில்லை அது தொழிலாளி இயக்கம் எழுப்பிய வினாகட்கு விடையாக உதித்தது

19ஆம் நூற்றாண்டில் முதலாளியம் மிகவும் வலிமை மிக்கதாகத்தான் இருந்து வந்தது அது தனது தொடக்க கால கட்டத்தை - மாந்தனை வியந்து போற்றும் உந்தாற்றலைக் கலைஞர்களுக்கும் பாவலர்களுக்கும் ஊட்டி, மாந்தனை ஏற்றிப் போற்றிப் பெருமைப் படுத்துமாறு அவர்களைத் துண்டிவிட்ட காலத்தை வெகு காலத்துக்கு முன்பே கடந்துவிட்டது என்பது உண்மைதான் அதன் கோட்பாட்டுவாணர்கள் உரிமை, சமன்மை, உடன்பிறப்பாண்மை ஆகியவற்றை நேர்மையோடு விளக்கி வந்த காலத்திய முதலாளியமாக அது இருக்கவில்லை; அது முதிர முதிர, அதன் முன்னாள் கொள்கைளெல்லாம் கடந்த கால இருளில் மங்கி மறைந்து