பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

73


போயின செல்வம் ஒன்று மட்டுமே போற்றுதலுக்கும் வணக்கத்துக்கும் உரியதாக இருந்தது

19ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில், தொழிலாளி வகுப்பு இயக்கம் தனது தன்னிச்சையான முதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட காலத்தில், முதலாளியத்துக்கு முதன் முதலாக இடுக்கன் படலங்கள் சூழத் தொடங்கின. இந்தப் படலங்கள் பலமுறை கறுத்துத் திரண்டு கணத்து வந்த போதிலும்கூட, முதலாளிகளும் அவர்களின் கோட்பாட்டாளர்களும் அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டிய தேவை எதையும் காணவில்லை; அவர்களுக்கு எதிர்காலம் நம்பிக்கையூட்டுவதாகவே தோன்றியது

இதன் பின் 20ஆம் நூற்றாண்டு வந்தது அது பொருளியல் நெருக்கடிகளுக்கு முடிவு கட்டும் ஒரு புது ஊழியாக இருந்தது விளைவாக்கம் மேலோங்கி வளர்ந்தது; ஒவ்வொரு நாளும் புதிய புதிய தொழில்நுட்ப வெற்றிகள் தோன்றி வந்தன; வளர்ச்சி பெற்ற முதலாளிய நாடுகளின் வாழ்க்கைத் தரம் ஒப்பு நோக்கில் உயர்ந்த தரத்தை எய்தியது ஆனால் இவையனைத்தும் முதலாளி வகுப்பு விரும்பித் தவம் கிடந்த பாதுகாப்பைக் கொண்டு வரவில்லை

கூர்மையான வகுப்புப் போராட்டம், குடியேற்ற வல்லாட்சி முறையின் வீழ்ச்சி, தன்னிச்சையான அரசியல் பொருளியல் வளர்ச்சிக்காகப் பற்பல மக்களும் நடத்திய போராட்டம் - ஆகிய அம்சங்கள் அனைத்தும் தனிகொடுங்கோன்மையின் அடிப்படையையே தகர்த்துக் கொண்டிருக்கின்றன

தனிக் கொடுங்கோன்மையும் எதிர்த்துத் தாக்குகிறது தடியேற்றங்களும் அரைக் குடியேற்றங்களும் அரசியல் விடுதலைக்குச் செல்லும் வழியை அடைத்துத் தடுக்க அது