பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

வருங்கால மானிட சமுதாயம்


முழு மூச்சோடு போராடுகிறது மேலும் தேய விடுதலைப் புரட்சிப் பேரலைகளால் அது தூக்கி யெறியப்பட்டுத் தோல்வியுறும்போது, புதிய குடியேற்றத்தின் பல்வேறு வடிவங்களைக் கண்டறிந்து அவற்றின் மூலம் புதிதாகத் தோன்றிய அரசுகளில் தனது பொருளியல் வலிமையை நிலைப்படுத்திக் கொள்ள முனைகிறது தனிக் கொடுங்கோன்மையும் தொழிலாளி வகுப்பு இயக்கத்தைப் பிளவுபடுத்தச் சூழ்ச்சி செய்கிறது, ஒரு "வலுவான இட"த்திலிருந்து கொண்டு, தனது ஆணையைக் கொண்டு செலுத்துவதற்காக, படைக் கூட்டுக்களை விரைவாக ஏற்படுத்துகிறது நேரடியான வலிந்து கவர்வதிலும் இறங்குகிறது

கம்யூனிச வழியில்

புதிய சமுதாயத்துக்குச் செல்லும் முதல் நடவடிக்கைகள் எளிதான்வையாக இருக்கவில்லை வருங்காலத்துக்குச் செல்லும் வழியை வகுக்க நேர்ந்த நாடான உருசியா மிகமிகக் குறைந்த பொருளியல் ஆற்றல் வளத்தையே பெற்றிருந்தது மேலும், முதல் முதல் உலகப் போர், சோவியத்துக் குடியரசின் உள்நாட்டு எதிரிகளுக்கும் அயல்நாட்டு ஆக்கிரமிப்பாளர்களுக்கும் எதிராக நடத்திய உள்நாட்டுப் போர் ஆகியவை நடந்த ஆண்டுகள் அந் நாட்டைப் பொருளியல் வீழ்ச்சி நிலைக்கே கொண்டு சென்று விட்டன. இரும்பை உருவாக்கும் தொழில் போன்ற சில தொழில்களை அந் நாடு 18ஆம் நூற்றாண்டின் நிலையிலிருந்தே புத்துயிர் வேண்டியிருந்தது மக்கட் தொகுதியிலும் பெரும் பாலோர் கல்வி அறிவற்றோராக அல்லது அரை குறைக் கல்வி பெற்றோராக இருந்தனர் எஞ்சியிருந்த முதலாளிகளும் அனைத்து சமுதாயப் புத்துயிர்களுக்கும் எதிராகப் போராடினர்

பகைமை பாராட்டும் முதலாளிய உலகின் முற்றுகைக்கு ஆளாகியிருந்த சோவியத்து உருசியா அயல்