பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

77



போரில் பெற்ற வெற்றியின் பயனாய் ஒர் உலக சோஷலிச அமைப்பு உருவாகியுள்ளது. பல மக்கள் மக்களாட்சி நாடுகள் சமுதாய உறவுகளில் தீவிரமான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளன; சமன்மையைக் கட்டியமைப்பதைப் நிறைவு செய்து வருகின்றன. அவை நடந்து சென்ற பதை சோவியத்து மக்கள் மேற் கொண்ட பாதையின் எந்திரிகமான மறுபதிப்பு அன்று. புதிய சமுதாயத்தின் பொதுவான முன்னேற்றத்தில், ஒவ்வொரு நாட்டு மக்களும் தனது வரலாறு, தேசியத் தன்மைகளையும் பிற தன்மைகளையும் தக்கபடி மதித்துணர்ந்து தத்தம் புதிய பாதையை வகுத்துச் செல்கின்றனர்; எனினும் இந்த வளர்ச்சியின் பொதுவான திசைவழியும் அதன் பொதுவான முறைகளும் அனைத்து சமன்மை நாடுகளுக்கும் இயல்பாகவே ஒரே சீராக உள்ளன. மேலும் சோவியத்து ஒன்றியப் பட்டறிவும் அவர்களுக்குப் பயன்பட்டது. சமன்மை நாடுகள் பெரும்பாலும் தமது முயற்சிகளை ஒன்றிணைக்கின்றன; புதிய சமுதாயத்தைக் கட்டுவதில் ஒன்றுக் கொன்று நட்புறவோடு உதவிக்கொள்கின்றன. அவற்றின் கூட்டு முயற்சிகளின் பயன்களே அவற்றின் சிறப்பை எடுத்துக் கூறும்.

தமது பொருளியலை வெகு விரைவில் வளர்த்துக் கொண்டு விட்ட சமன்மை நாடுகள் , இன்று உலகின் மொத்தத் தொழில் துறை ஆக்க அளவில் ஏறத்தாழ ஐந்தில் மூன்று பங்கை நிறைவு செய்கின்றன. இந் நாடுகளில் பலவும் கடந்த காலத்தில் தொழில் வளர்ச்சி மிகுந்த முதலாளித்துவ நாடுகளைக் காட்டிலும் மிகவும் பின் தங்கிக் கிடந்தன.

சமன்மை பொதுவுடைமை சமுதாயத்தின் முழுமையான சித்திரத்தைத் தந்துவிட முடியாது. ஏனெனில் பொதுவுடைமை சமுதாயம் ஈடிணையில்லாத