பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

வருங்கால மானிட சமுதாயம்



மின்விசைத் தொழில்துறை ஆகியவற்றின் எதிர்காலம் மாந்த குலத்துக்கு இன்றியமையாது என்பதில் ஐயமில்லை; எனினும் இது எல்லா மக்களையும் சஞ்சலத்துக்கு உள்ளாக்கக் கூடிய ஒன்றறை. ஆனால் உலகப் போர் வந்து விடுமோ என்ற சிக்கல் மாந்த குலத்தின் உயிர் வாழ்க்கையையே அச்சுறுத்தும் பெரும்பாடாகும். இது இன்று வாழ்ந்து வரும் ஒவ்வொருவருக்கும் வாழ்வியல் சிக்கலாகும் - வாழ்வா, வீழ்வா என சிக்கலாகும். இதே போல், கோடானுகோடி மக்களின் வருங்காலமும் வண்ண இன குடியேற்ற ஆதிக்க ஒடுக்குமுறைக்கு எதிராக நடக்கும் போராட்டத்தின் விளைவைப் பொறுத்ததாகும். உற்பத்திச் சாதனங்களின் தனியார் உடைமை நீடித்திருப்பதோ, பலருக்குத் தமது வேலைகளை இழக்கச் செய்யும் எங்கும் பரந்த இடர்பாடாய் பசிக்கும் வறுமைக்கும் பலியாக்கும் அச்சுறுத்தலாக அமைந்திருக்கிறது.

மாந்தகுலத்தின் வருங்காலம் பற்றி வண்ணிக்கும் போது, பல சிந்தனையாளாளர்கள் செழித்தோங்கும் அறிவியல், தொழில் நுட்பம். நிலத்திற்பாற்பட்ட நாகரிகங்களோடும் தாராளமான தொடர்புகள் முதலிய சித்திரங்களைத் தீட்டிக் கற்பனையை உலுக்கி விடுகின்றனர்.

ஆனால் வேறுவிதமான வருங்காலத் குறிகாரர்களும் பலர் உள்ளனர். அவர்களது கற்பனையிலே அறிவியலின் பெருவளர்ச்சி கரிந்து சாம்பலான உலகையும், காட்டாண்டித்தனமான மாந்தத் தன்மையற்ற மக்களையும், அழிந்து பட்ட நாகரிகத்தையும்தான்் தோற்றுவிக்கிறது.

மாந்த குலததின் வருங்கால சமுதாயத்தின் மீது தான், சமுதாய வாழ்க்கை ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள முறையின் மீதுதான் இன்றைய அறிவியல், தொழில் நுட்பப்