பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

வருங்கால மானிட சமுதாயம்



காட்சி பணி நிலைகளில் ஏற்படும் பெருக்கமும் ஒரு முதன்மை பாங்கினை வகிக்கும். எனினும் பொதுவுடைமையின் பொருளியல், தொழில் முனைப் சிக்கலின் அடிப்படையாகவும் விளங்குகின்றது.

விளைவாக்கத்தில் அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பரவலாகப் பயன்படுத்துவது,மேலும் மின்மயமாக்குவது, அனைத்தையும் எல்லாவற்றையும் எந்திரமய மாக்குவது, வேதியல் தொழில்நுட்பலியலை மேன் மேலும் அதிகமாகப் பயன்படுத்துவது, விரிவான முறையில் தானியங்கி கருவிகளை பெருக்கச் செய்வது, தொழில்நுட்ப அழகியலையும் படைப்பாக்க அழகியலையும் உயர்த்துவது ஆகிய இவை அனைத்தும் ஆக்க அளவைப் பெரிதும் அதிகரிக்கும்; ஆக்கத்தின் குணத்திலும் ஒரளவு மாறுதல்களைத் தோற்றுவிக்கும். உழைப்பின் உற்பத்தியாற்றல் வளர்ச்சி வேலை நேரத்தைக் குறைக்கும்: ஒவ்வொரு மனிதரின் எல்லாவற்றின், இசைவான வளர்ச்சிக்குரிய கருவி நிலைமைகளை உருவாக்கும்; அவரவர் தேவைக்கேற்ப வினியோகம் என்பதைச் செயற்படுத்தும் நாளைச் சமீபித்து வரச் செய்யும்.

மான்செசுட்டர் என்று எழுத்துக் கூட்டி
லிவர்பூல் என்று ஒலிக்கும் அழகு.

கடந்த பத்தாண்டுகளில் முதலாளிய கோட்பாட்டில் ஒரு நிலைமாற்ற மாறுதல் ஏற்பட்டுள்ளது. வரலாற்று வளர்ச்சியைப் பொறுத்தவரை அதன் முக்காலச் கோட்பாடுவாணர்கள் கூறிவந்த பற்பல கருத்துக்களை அது உதறித் தள்ளிவிட்டது.

18-ஆம் நூற்றாண்டில் ஒரு சமுதாய அமைப்பை நீக்கிவிட்டு மற்றொரு சமுதாய அமைப்பு இடம் பெறுவதை, அதாவது நிலக்கிழார் அமைப்பைப் போக்கி