பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

81


விட்டு முதலாளியம் இடம் பெறுவதைக் குறிக்கும் சமுதாய முன்னேற்றக் கருத்தை தர்காட்டும் கொன்டார்செட்டும். புகுத்தினர். எனினும் 19-ஆம் நூற்றாண்டிலேயே, முதலாளியக் கோட்பாடுவாணர்கள் முன்னேற்றத்தைத் தனியார்-உடைமை உறவுகளின் முழுமையாகக் கருதிவிட்டனர். 19-ஆம் நூற்றாண்டின் முற்பாதியில், "முன்னேற்றம் என்பது ஒழுங்கின் வளர்ச்சி" என்று அகசுடி காம்ட்டி அறிவித்தார். இங்கு "ஒழுங்கு" என்பது விளைவாக்க கருவிகளின் தனியார் உடைமையையும் அதன் ஏனைய எல்லா உள்ளார்ந்த தன்மைகளையுமே குறித்து நின்றது.

இப்போதோ, இந்த இருபதாம் நூற்றாண்டிலோ அவர்கள் "முன்னேற்றம்" என்ற சொல்லையே ஒரு மாயச் சொல் எனக்கூறுகின்றனர். (1963-ல் மெக்சிகோவில் நடந்த மெய்மைவாணர்களின் 13-வது பேராயத்தில் அமெரிக்கச் சமூகவியலாளர் சனிடெர் அளித்த அறிக்கையின் கூற்று இது). இந்தச் சொல்லுக்கு மாற்றாக "சமுதாய மாற்றங்கள்" எனக் கூற வேண்டுமெனச் சொல்கின்றனர். (அமெரிக்கச் சமூகவியலாளர் தபிள்யு. ஆக்பர்ன் கூற்று இது). இதேபோல் வளர்ச்சி பற்றிய கருத்தும் புறக்கணிக்கப் பட்டுள்ளது.

"சமுதாய மாற்றங்கள்" பற்றிய அவர்களது கருத்து ஆரவாரமாகக் கொட்டி முழக்கப் படுகின்றது. இதன் சித்தாந்தங்களைப் பரவலாகப் பரப்புரை செய்யப் பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன. அக் கோட்பாடு கள் வருமாறு:

1. "மக்கள் முதலாளியம்". இதில் உழைக்கும் மக்களில் சில பகுதியினர் பல்வேறு குழுமங்களில் பங்குதாரர்கள் ஆகின்றனர்; அதன் மூலம் குழுமங்களின் ஆக்கத்தில் " பங்கு பெறுகின்றனர்." இதன் மூலம் தொழிலாளர்களுக்கும் கோடிக்குரியவரர்களுக்கும் இடையே வகுப்பு

வ மா - 6