பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

83


தடபுடலான பல சொற்களைக் கொண்டுள்ளது. ஆனால் எல்லா விளக்கமும் ஒரே காரியத்துக்குத்தான் வளர்ச்சியானது "பகுத்தளிப்பதில் ஒரு புரட்சியை", அதாவது பயன்பாடும், சமுதாய வளம் ஆகியவற்றின் உயர்நிலையை நோக்கிச் செல்லும் நிலையான விரைவுபடுத்தப்பட்ட இயக்கத்தை உறுதிப் படுத்துகிறது என்று மெய்பிக்கவே பயன்படுகிறது. இக் "கொள்கை"யின் ஆதரவாளர்கள் பின்வருவன போன்ற சான்றுகளைக் கூற முனைகின்றனர்; பெருஞ்செல்வரான துப்போன்ட்டின் மனைவியும் தொழிலாளர்கள் - எடுத்துக்காட்டாக சிகாகோ நகரத்து புலால் கடைத் தொழிலாளர்கள் - அருந்துகின்ற அதேவகையான பாலையே அருந்துகிறார்; அந்தத் தொழிலாளர்கள் எவ்வளவு பாலைக் குடிக்க முடியுமோ, அந்த அளவுக்கு அதிகமாகவும் அவர் குடிப்பதில்லை; பெருஞ்செல்வரான இராக்பெல்லரும் கூட அவரது தொழில் நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்களைப் போலவே ஒரே வகையான கடற்கரை இருக்கையில் படுத்துத்தான் செங்கதிர் குளிப்பு செய்கிறார்; குடியரசுத் தலைவரும் எளிய அமெரிக்கனும் ஆலிவுட் புகழ் நடிகர்கள் நடிக்கும் ஒரே தொலைக் காட்சியைத்தான் கண்டு களிக்கின்றனர். வையால். வையால்.

இத்தகைய கோட்பாடுகளை விளக்குவதன் மூலம் முதலாளியச் கோட்பாட்டினர்கள் மிகவும் மிகுதியான அரசியல் முடிவுகளுக்கும் கொள்கை முடிவுகளுக்கும் வந்து விடுகின்றனர். அதாவது மார்க்சிய பொருள் நிலையில் கூறப்படும் முதலாளியம் அமெரிக்க நாட்டில் இப்போது இருந்து வரவில்லை யென்றும் ஏனெனில் வெற்றி என்பது தனியார் உடைமை, முன் முயற்சி, எதிரிடை ஆகியவற்றின் விளைவாக ஏற்படுவதாகும் என்பதை எடுத்துக் காட்டும் ஓர் எடுத்துக் காட்டாகவே