பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

வருங்கால மானிட சமுதாயம்


அமெரிக்கா விளங்குகின்றது என்றும் முடிவு கட்டுகின்றனர்.

இவையனைத்தும் "முதலாளியத்தின் உரு மாற்றம்" பற்றிய சிற்றுார்த்தனமான புனைவுச் சித்திரமேயாகும். பொதுவுடைமைக் கருத்துகளையும் சரிகட்டி நிற்பதற்காகவே இதனைத் தோற்று வித்துள்ளனர்.

முதலாளியத்தின் இந்தக் "புனைவுச் சித்திர"த் தன்மையையும், "சமுதாய மாற்றங்"களின் போக்குகளையும் பற்றி ஏற்படக் கூடிய அனைத்து ஐயப்பாடுகளையும் அகற்றுவதற்காக, புதிய தனியரசாட்சி கோட்பாட்டு வாணர்கள் இன்னொரு கருத்தையும் - "தனிமய தொழில் மய சமுதாயம்" என்ற கருத்தையும் - தோற்றுவிக்கின்றனர். முதலாளியத்தின் கீழ் ஏற்படும் "சமுதாய மாற்றங்கள்" பற்றிய "தெள்ளத் தெளிவான" சித்திரங்களை வழங்குவதோடு, இந்தப் புதிய கருத்தைக் கொண்டு, பொதுவுடைமை மாந்த இயல்போடும் மானிட நலன்களோடும் மோதிக் கொண்டதால் அது தோல்வி கண்டு விட்டது என்றும், பொதுவுடைமை "சமுதாய மாற்றங்க"ளுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறது என்றும், அந்த மாற்றங்கள் அதனுள் தனியார் நலனையும் விளைவாக்க கருவிகளின் தனியார் உடைமையையும் "திரும்பவும கொண்டு வருகின்றன" என்றும், இதன் விளைவாக, (சாராம்சத்தில்) முதலாளித்துவத்தின் தன்மைக்ளையும் (சில குறிப்பிட்ட புறத் தன்மைகளில்) பொதுவுடைமைத் தன்மைகளையும் ஒரு சேரத் தன்னுட்கொண்ட ஒரு புதிய சமுதாயத்தின் தோற்றத்துக்கு இது வழி வகுக்கின்றது என்றும் மெய்பிக்கப் பார்க்கின்றனர்.

"முதலாளியமும் பொதுவுடைமையும் தாமாகவே ஒன்றிவிடுமா?" - இந்தக் வினாவையும் "ஒருமித்த தொழில்மய சமுதாயத்தின்" கோட்பாடு வாணர்கள்