பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

85


கேட்டுக் கொள்கின்றனர். இறுதிக் கட்டத்தில் அவை சங்கமித்தே தீரும் என்பதே அவர்களது ஒரே பதில். கம்யூனிசம் கூறுகின்ற திட்டமிடுதல், நல்வாழ்வு ஆகியவை யெல்லாம் "மக்கள் முதலாளியத்தின் ஆரம்பக் கட்டத்துக்கு மாறிச் செல்லும் மாற்றத்தின் அடிப்படையில் நிறைவேற்றப்படும். மக்கள் முதலாளியமோ "பகிர்ந்தளிப்பில் புரட்சி"யை உண்டு பண்ணும்; இவ்வாறாக, அது "சம வாய்ப்புகள் கொண்ட சமுதாயமாக" மாறிவிடும் இதனால் "சமன்மையும் முதலாளியமும் ஒரே பொருளின் இரு வடிவங்களே"யாகும்.

மார்க்சியப் பகைவர்கள் அறிவியல் பொதுவுடைமையை அதனுள்ளிருந்து தகர்க்கவே எப்போதும் முனைகின்றனர். அதாவது மார்க்சின் கருத்துகளை இலெனினது நடவடிக்கைகளுக்கு எதிராகக் காட்டித் தகர்க்க முனைகின்றனர். மார்க்சின் "பொருளியல் ஆய்வுறுதி" 20ஆம் நூற்றாண்டு பட்டறிவால் மறுக்கப்பட்டதைக் கண்டறிந்த இலெனின் தன்னிச்சைத் தருக்கத்துக்குத் தாவி விட்டதாக அவர்கள் கூறுகின்றனர். ஆனால், உண்மை இதுதானா?

முதலாவதாக, "மார்க்சின் பொருளியல் ஆய்வுறுதி" மார்க்சியத்தை திறனாய்வு செய்தவர்களின் கண்டபிடிப்பேயாகும். சமுதாய வளர்ச்சி அதன் பொருளாதார, ஆக்க வளர்ச்சியால் உறுதி செய்யப் படுகின்றது. என்று மார்க்சுமெய்ப்பித்தார். ஆனால் இந்த வளர்ச்சி தான்ாகவே, தன்னிச்சையாகவே நிகழ்ந்து விடுவதில்லை. இதற்க மாறாக, பொருளாயம் முழுவதும், சமுதாயம் முழுவதும் எய்துகின்ற முன்னேற்றமானது மக்களின், தேயத்தின் வகுப்புகளின் செயல்பாட்டினால் ஏற்படும் விளைவாகும். இந்தச் செயற்பாடும் அந்த மக்களின் உணர்வு, அவர்களது மன உறுதி, சமுதாய