பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

வருங்கால மானிட சமுதாயம்


நடவடிக்கைகள் முதலிய கூறுகளோடு நெருங்கிய தொடர்பு கொண்டதாகும்.

இலெனினது "தன்னிச்சத்த்ருக்கமும்" இதே போன்ற இன்னொரு கண்டுபிடிப்புத்தான். வெகு மக்களின் ஆக்க மிக்க அரசியல் நடவடிக்கைகளைப், புரட்சிகரமான ஆக்க ஆற்றல்களை ஊக்குவிக்கக் கூடிய நிலைமைகளை எண்ணி ஆராய்வதில் இலெனின் பெருங்கருத்து செலுத்தினார். இது முற்றிலும் இயல்பானதே. ஏனெனில் தனியதிகார ஆட்சி ஊழி சமன்மைப் புரட்சி சிக்கலினை உண்மையில் முன்னுக்குக் கொண்டு வந்து விட்டது. இதனை தனியதிகார ஆட்சியின் பொருளியல் முறைகளைத் துருவி ஆராய்வதன் மூலம் இலெனின் நிரூபித்தும் காட்டினார். இந் நிலையில் மார்க்சுக்கு எதிராக இலெனினை நிறுத்திக் காட்டுவதற்கு ஆதாரங்கள் ஏது?

தனிவல்லாட்சிக் காலத்தின் வரலாற்றுப் பட்டறிவையும் சமன்மை அமைப்பையும் கருத்தில் கொண்டு, இலெனின் மார்க்சின் கருத்துாற்றை வளர்க்கத்தான் செய்தார்; அவர் மார்க்சியத்தைப் புதிய கருத்துகளால் செழுமையுறச் செய்தார்.

முதலாளியமும் பொதுவுடைமையும் தம்முள் ஒன்றுமிக்கின்ற திசை வழியில் என்றுமே வளர்ந்ததுமில்லை; வளரப் போவதும் இல்லை. அவை என்றுமே தனித்த "ஒன்றிணைந்த தொழில்மய சமுதாயமாக" ஒன்றுமிக்கப் போவதில்லை.

முதலாளியக் கோட்பாட்டாளர்கள் இப்போது சோவியத்து ஒன்றியத்திலும் பிற சமன்மை நாடுகளிலும் நடை பெற்று வரும் பொருளியல்ச் சீர்திருத்தங்களை குறிப்பாகச் சுட்டிக் காட்டி, இந்தச் "சங்கம"த்தை மெய்பிக்க முனைகின்றனர். இந்தச் சீர்திருத்தங்கள் அங்காடி சரக்கு விளைவாக்க முறைகளை ஆக்கம், விலை கடன் முதலிய பொருளியல் உந்துகோள்களின்