பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

87


பொருளியல் உறுதியோடு பயன்படுத்தும் அடிப்படையில் அமைந்தனவாகும். இத்தகைய பொருளியல் உந்து ஆற்றல்களிடம் செலுத்தப்படும் கவனத்தை, சமன்மை சமுதாயம் தனியார் உடைமை அடிப்படையில் அமைநத விளைவாக்கக் கோட்பாடுகளுக்குத் திசைதிரும்புகின்றது என்று குற்றம் சாட்ட "ஒன்றான தொழில் மய சமுதாயத்தை"ப்பற்றிப் பேசும் கோட்பாட்டினர் பயன்படுத்துகின்றனர்.

எனினும் சோவியத்து ஒன்றியத்திலும் வேறுபல சமன்மை நாடுகளிலும் ஏற்பட்டுவரும் பொருளியல் மாற்றங்கள், பொதுவுடைமை அமைப்பின் பொருளியல் சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்கான, பொதுவுடைமை அமைப்பு. அனைத்து மக்களின் தேவைகளையும் முழுமையாக நிறைவு செய்தல் ஆகிய நடுமையான குறிக்கோளை மிகத் விரைவாக எய்துவதற்கான மிகவும் ஒத்ததான் நிலைமைகளை உருவாக்கும் கருவியேயன்றி வேறில்லை.

பொதுவுடைமை முழுமையாக வெற்றி பெறும்போதுதான் அங்காடிச் சரக்கு ஆக்கமும், சந்தைக்சரக்கு - பண உறவுகளும் போக்கப்படும். அவை சமன்மையின் கீழ் இன்னும் இருந்தே வருகின்றன. பயன்பாட்டுப் பண்டங்களை உழைப்புக்கேற்றபடி பகிர்ந்த்ளிப்பதன் மூலம்(சமன்மையின் கீழ் பண்டங்களின் பகிர்வு உழைப்பின் நிலைக்கும் அளவுக்கும் ஏற்பவே நடைபெறுகின்றது) குறிப்பிட்ட அளவு உழைப்பைத் தன்னுள் கொண்டஒரு விற்பனைப்பொருள் அதே அளவு உழைப்பைத் தன்னுட் கொண்ட மற்றொரு விற்பனைப் பொருளுக்குப் பரிமாற்றிக் கொள்ளப்படுகிறது.

சமன்மை சமுதாயத்தில் நிலவும் அங்காடிச் சரக்கு - பண உறவுகளின் தன்மை முதலாளியத்தின் கீழுள்ள இதே வகையான உறவுகளிலிருந்து அடிப்படையிலேயே