பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

7


புரட்சியின் திசை வழியும் விளைவும் சார்ந்திருக்கின்றன. இது மாந்த குலத்தின் மலர்ச்சிக்கு வழிவகுக்குமா அல்லது அதன் வீழ்ச்சிக்கு வழி கோலுமா?

மாந்த குலத்தின் சமுதாய எதிர்காலப் பிரச்சினைகள்

ஒவ்வொருவரின் வாழ்விலும் - அவர் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் - எதிர்கால சிக்கல்கள் புகுந்து விடுகின்றன.

எதிர்காலம் எத்தகையாக இருக்கும்?

19-ம் நூற்றாண்டில் சூல்ஸ் வெர்னி எண்ணிறந்த அறிவியல், தொழில் நுட்பக்கருத்துகளை வெளியிட்டார்: அவை வெற்றி பெறப் போவதையும் கூட முன்னோட்டமாகத் தெரிவித்தார். இந்தக் கருத்துகள் நடைமுறை பட்டறிவாகி வருதை நமது 20-ம் நூற்றாண்டு கண்டு வருகிறது.

சூல்ஸ் வெர்னியால் தமது காலத்துக்கு ஐம்பதாண்டுகட்கும் அப்பால் முன்னோக்கிக் காண முடிந்தது; ஏனெனில் அவர் தமது வருங்காலப் பலன்களை அக்காலத்தில் புதியனவாக விருந்த அறிவியல் தொழில்நுட்பப் போக்குகளின் அடிப்படையில் வகுத்துக் கூறினார். இன்றைய சாத்தியப் பாடுகளின் மூலம் நடைமுறை இயல்பை உருவாக்குவதிலேயே எதிர் காலம் எப்போதும் அடங்கியுள்ளது.

எனவே இன்று எராளமான மக்களின் மனத்தை ஆட்கொண்டிருக்கும் மாந்த குலத்தின் வருங்காலச் சமுதாயம் தொடர்புடைய சிக்கல்களுக்குரிய அறிவியல் முறையான சான்று நிறைந்த விடையைக் கண்டறிவதும் ஆகுவதே யாகும். இதற்கு மனித குல வரலாற்றைக் கற்க வேண்டும்; சிறைவாழ்வும்; தூக்குத் தண்டனை, வறட்சி, போர் முதலிய கொடுமைகளாலும் கூடத் தடுத்து நிறுத்த