பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

89


முதலாளியத்தின் கீழ் ஏற்படும் "சமுதாய மாற்றங்களை"ப் பற்றி முதலாளியக் கொள்கைகள் தீட்டித் தந்துள்ள சித்திரம் முழுவதும் உண்மைக்குப் பெரிதும் புறம்பான வண்ணங்களாலேயே தீட்டப்பட்டுள்ளது.

பயனீட்டாளரின் நலன்களுக்கு முற்றிலும் பொருந்திய படைப்பு வளர்ச்சியில் அடிப்படையில், இக்கால முதலாளியம் ஒரு "சேமநல அரசா"க மாறியுள்ளது என்று இக்கால முதலாளியத்தின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். மேலும் வளர்ச்சி பெற்ற, முதலாளிய நாடுகளில் உழைக்கும் மக்களின் குறிப்பிட்ட பகுதியினரது வாழ்க்கை நிலை மிகவும் உயர்வாக இருக்கிறது என்பதும் அவர்களது முதன்மையான கருத்தோட்டமாகும்.

முதலாளிய சமுதாயத்தில் பல இலகக்கணக்கானவர்கள் வேலையில்லாத் திண்டாட்டத்துக்கும் வறுமைக்கும் ஆளாகி நிற்பதை அவாகள் பொருட்படுத்துவதில்லை; அங்கு வேலையில் இருப்பவர்களும் கூட வேலையில்லாத் திண்டாட்ட அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர். 1965இல் அமெரிக்க தனி நிலை முதலாளிகள் 4,500 கோடி தாலர்களை நிகர ஆதாயமாகப் பெற்றுக் கொண்டனர்; இது இரண்டாம் உலகப் போர் ஆண்டுகளின்போது கிட்டிய ஆண்டுச் சராசரி ஆதாயத்தைக் காட்டிலும் நான்கு மடங்கு அதிக மாகும். இதே சமயத்தில் மொத்த மக்கள்தொகையில் 15 விழுக்காட்டுக்கு மேற்பட்ட, 32 கோடி அமெரிக்கர்கள் வறுமையில் வாடுகின்றனர். இதனை அமெரிக்க அரசாங்கம்ே ஒப்புக்கொண்டுள்ளது.

"பயனிட்டாளரின் நலன்களுக்கு முற்றிலும் பொருந்திய அந்த விளைவாக்கம் என்னவாயிற்று? பயனிட்டாளரைப் பற்றிய சிந்தனையெல்லாம்,அவர் வாங்கும் ஆற்றல் படைத்தவராக இருக்கின்ற