பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

91


ஆப்பிரிக்க இலத்தீன் அமெரிக்க நாடுகளின் தேய வருமானமோ அமெரிக்கா, இங்கிலாந்து, மேற்கு செருமனி வேறு பிற தொழில் வளர்ச்சி மிக்க முதலாளிய நாடுகள் ஆகியவற்றின் வருமானத்தைக் காட்டிலும் நம்புதற்கரிய வகையில் மிகமிகக் குறைவாக உள்ளது. இந்த தனி வல்லாதிக்க நாடுகளோ, குடியேற்ற, அடிமை நாடு மக்களைக் கொள்ளையடித்துத்தான்் தமது செல்வங்கள் பலவற்றையும் திரட்டிக் கொண்டுள்ளன.

"அடுக்குகளாக்கல்" என்னவாயிற்று? மக்களை அவரவர்தம் வருமானம், கல்வி, பிற தன்மைகள் முதலியவற்றுக் கேற்பப் பகுதி பகுதியாகப் பிரிக்கலாம் என்பது உண்மைதான்். இந்த வேறுபாடுகள் அனைத்துக்கும் குறிப்பிட்ட பொருள் உண்டு. ஆனால் விளைவாக்கக் கருவிகளின் உடைமையோடுள்ள பல்வேறு உறவுகளாலும், உற்பத்தி வளர்ச்சிப் போக்கில் சமுதாய குழுக்களுக்குள்ள பல்வேறு பங்கினாலும் உறுதி செய்யப்படும் சமுதாயத்தின் வகுப்புப் பிரிவினையை அவை மாற்றிவிட முடியாது. இந்த கூறுகளை ஒருவர் எவ்வளவு இடர்ப்பட்டு புறக்கணிப்பு செய்துவிட முயன்றாலும், உண்மை நிலைமை அவற்றை முன்னணிக்குக் கொண்டுவரத் தான்் செய்யும்: அந்த "இல்லாத"வர்க்கப் போராட்டம் நாள்தோறும் இருந்து கொண்டுதான்் வருகிறது. ஆண்டு தோறும் வேலை நிறுத்தம் செய்பவர்களின் தொகை 5.5 முதல் 5.7 கோடிவரை இருந்து வருகிறது - இது சென்ற பத்தாண்டுகட்குமுன் இருந்ததைக் காட்டிலும் 100 விழுக்காடு அதிகமாகும்.

"மக்கள் முதலாளியவம்" என்னவாயிற்று? எடுத்த எடுப்பில் சொன்னால், பொருளியல் முறையாக வளர்ச்சிபெற்ற நாடுகளிலும் கூட, தொழிலாளர்களின் மொத்த எண்ணிக்கையில் ஐந்து அல்லது ஆறு