பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

வருங்கால மானிட சமுதாயம்


விழுக்காட்டுக்கு மேற்படாத "மக்கள் முதலாளிகளே" உள்ளனர். ஆனால் சிறப்பான செய்தி இதுவன்று. உண்மையில் கவனத்துக்குரிய செய்தி வேறு. சான்றாக, திருவாளர் போர்டுக்கு அவரது சம்பளம் கொடுக்கப்படாது போனால், அவர் தமக்குக் கிடைக்கும் ஆதாயப் பங்குகளைக் கொண்டு வாழ்வதால், ஒன்றும் குறைந்துபோய்விடமாட்டார். ஆனால் இதே நிலைமை ஒரு தொழிலாளிக்கு ஏற்படுமானால், அவருக்குக் கிடைக்கக்கூடிய பங்குத் தொகை அவரது சாவுச் செலவுக்குக்குகூடக் கட்டிவராது. இவைதாம் "சம வாய்ப்புகள்" ஆகும்!

ஒரு சொல் எவ்வாறு எழுத்துக் கூட்டிச் சொல்லப்படுகிறதோ, அவ்வாறே அது ஒலிக்கப்படாமல் போவது பல மொழிகளுக்குரிய தனித்தொரு தன்மையாகும். ஆங்கிலம் படிப்பவர்கள் இவ்வாறு அடிக்கடி வேடிக்கையாகச் சொல்வார்க்கள்: "நீங்கள் 'மான்செசுடர்' என்று எழுத்துக் கூடடி, 'இலிவர்பூல்' என்று ஒலிக்க வேண்டும்." -

இக்கால முதலாளிய சார்பாளர்கள் முதலாளியத்தையும் அதன் சமுதாய அமைப்பையும் பற்றிய கருத்தை, எழுத்துக் கூட்டுவதில் திருத்தங்கள் செய்வதன் மூலம் "மாற்று"த் தீர்மானித்தபோது அவர்கள் ஒன்றும் . அதனை வேடிக்கையாகச் செய்யவில்லை. ஆனால் மக்கள் ஏமாந்துவிட மாட்டார்கள். "மக்கள் முதலாளியம்" என்றால் "வல்லாதிக்கம்" என்றும், "அடுக்குகளாக்கல்," என்றால் "வகுப்புப் போராட்டம்' என்றும், "சேமநல அரசு" என்றால் "வேலையில்லாத் திண்டாட்டம், பிரிவினை, வறுமை" என்றும்தான்் பொருள் என்பதை அவர்கள் அறிந்து கொள்வர்.

இத்தகைய புதிய தலைப்புகளெல்லாம் முதலாளியத்தின் பொருள்தன்மையையோ அதன் கொள்ளைக்