பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

வருங்கால மானிட சமுதாயம்


புகுந்துவிடக் கூடிய ஒவ்வொரு ஆகும் நிலையையும் தடுத்து நிறுத்தவும், அந் நாடுகள் அரசியல் உரிமைப் பொருளாதார உரிமையின் மூலம் வலிமைபெறச் செய்தாக வேண்டும்.

தமது தேயப் பொருளாயலைக் கட்டி யமைப்பதில், தாம் எந்தப் பாதையில் செல்வது, முதலாளியப் பாதையிலா அல்லது சமன்மைக்கு வழி வகுக்கும் முதலாளியமற்ற பாதையிலா என்ற சிக்கல் புதிதாக விடுதலையடைந்த மக்களின் முன் தவிர்க் கொணாத வண்ணம் எதிர்ப்படுகிறது. எனினும் சில மக்கள் மூன்றாவது பாதை ஒன்றும் இருப்பதாகவும், உரிமை, செல்வவளம், பண்பாட்டு வளர்ச்சி ஆகியவற்றுக்கு அதுவே வெகுவிரைவாகச் செல்லும் பாதை எனவும் நம்புகின்றனர். ஆனால் விரைவிலேயே அவர்கள் அதில் நம்பிக்கை இழந்து விடுகின்றனர். ஏனெனில் அதில் அவர்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகளும் அந்தப் பாதையுமே போலியானவை.

வரலாற்றின் முறைகளை மீறுவதில் இதுவரை எவரும் வெற்றியடைந்ததில்லை. ஒவ்வொரு மக்களது வளர்ச்சியின் தனிப்பட்ட தன்மைகளை இங்குக் குறிக்கவில்லை - இந்த வளர்ச்சி அந்தந்த நாட்டின் பிரத்தியேகமான வரலாற்றுத் தன்மைகளையும் பிற தன்மைகளையும் பொறுத்ததாகும். செய்தி என்னவெனில், ஒவ்வொரு நாட்டு மக்களது வளர்ச்சியின் வேறுபட்ட போக்கானது உண்மையான வளர்ச்சி முறைகளை நடைமுறையில் கொண்டு வருவதில் ஒரு தனித் தன்மையான தேசிய வடிவமாக உள்ளது. வரலாற்றின் போக்கைப் பின் வாங்கச் செய்ய இயலாது. இறந்த காலம் என்றும் எதிர்காலம் ஆக முடியாது.

இது தொல்லுயிரியல் மூலம் தெரிய வந்துள்ளது; உலகில் ஒரு காலத்தில் தினோசார் என்ற மாபெரும்