பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

97


மக்களுக்கு வளமான வாழவைக் கொண்டு வரவும், இணக்கமான ஒத்துழைப்பின் அடிப்படையில் தேயங்களுக்கிடையே நட்புறவான உறவுகளை உறுதிப்படுத்தவும் தேவையான நிலைமைகளும் உருவாக்கப்படுகின்றன.

இவையனைத்தும் ஏற்கெனவே சோவியத்து ஒன்றியத்தில் எய்தப் பெற்றுவிட்டன. இதனை அறிய, உருசிய மக்களின் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் போதும். புரட்சிக்கு முந்திய காலத்தில் நடு ஆசியா, தூர. வடக்கு, சைபீரியா, தூரக் கிழக்கு முதலிய பகுதிகளில் வாழ்ந்த பல மக்களும் தொன்மையான வளர்ச்சிக் கட்டத்தில்தான்் இருந்து வந்தனர்

நாம் நடு ஆசியாவிலுள்ள உசுபெக், கிர்கீசு, தாசிக், துருக்மென் ஆகிய மக்களை மட்டும் பார்ப்போம். அக்டோபர் புரட்சிக்கு முன்னர் அவர்கள் பெற்றிருந்தது என்ன? தொழில் வளர்ச்சி முற்றிலும் இல்லை; அதனால் தேசியத் தொழிலாளி வகுப்பும் இல்லை நிலக் கிழார் ஆட்சியும், முழுமையான கல்லாமையும் இருந்தன. பல மக்கள் தமது மொழியின் எழுத்து வடிவத்தைக் கூடப் பெற்றிருக்கவில்லை.

இன்றோ நடு ஆசியக் குடியரசுகள் தமது மிகு வளச்சி பெற்ற தொழில் துறைக்கும், அனைத்து மக்கள் கல்வியறிவுக்கும், பள்ளிப் பிள்ளைகள் மாணவர்கள் ஆகியோரின் பெருந்தொகைக்கும், தேசிய விஞ்ஞானப் பேரவைக்கும், செழித்தோங்கும் தேசியக் கலை இலக்கியத்துக்கம் பேர்பெற்றவையாக விளங்குகின்றன.

பிற்பட்ட மக்களால் தனித்து வாழவே முடியாது எனக் கூறும் தனிவல்லாதிக்க "ஆய்வுரை"யைத் பொதுவுடைமையைக் கட்டியமைக்கும் மக்களது வாழ்க்கை முழுமையாக அழித்தொழித்து விடுகிறது

வ. மா- 7