பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அன்றும் இன்றும் எனும் நூலுக்கு 1987 ல் அளிக்கப் பட்டது. "அக்னி- அக்ஷர விருது”, ஆழ்வார்கள் ஆய்வு மையம் விருது, தமிழ் சான்றோர்கள் பேரவை விருது மற்றும் பல இலக்கிய அமைப்புகளின் தமிழ்ப்பணி விருதுகள் இவருக்கு வழங்கப்பெற்றுள்ளன.

நான்கு தலைமுறை எழுத்தாளர்களுடன் அன்புத் தொடர்பும் நட்பும் கொண்டிருக்கும் (வருங்கால) இளைய எழுத்தாளர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்து கவனிப்பைப்பெற்றிருக்கிறார். ஆடம்பரமற்ற முறையில் எளிமையாக வாழும் இந்த 81 வயது பிரமச்சாரி இப்போதும் எழுதுவதிலும் படிப்பதிலும் பலரோடும் கடிதத் தொடர்பு கொள்வதிலும் மகிழ்ச்சி காண்கிறார்.