பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரிமை |

இயல்பாகவே பயந்து செத்துக் கொண்டிருந்த கணவன் இப்போது விதிர் விதிர்த்தான். முரட்டு நாயைக் கண்டதும் அஞ்சி ஒடுங்கித் தனது வாலைச் சுருட்டிப் பின்கால்களுக்கு நடுவே எவ்வளவு திணித்துக் கொள்ளமுடியுமோ அவ்வளவுக்குத் திணித்துக் கொண்டு, கண்களில் பணிவு காட்டி, தலையைத் தாழ்த்தியபடி ஒதுங்கி ஒதுங்கிப் போகும் அப்பாவி நாயின் பரிதாபத் தோற்றத்தை நினைவு படுத்துவதாக இருந்தது அவனுடைய அவ்வேளையத் தோற்றம்

தற்காப்பு உணர்வும். தப்பிப் பிழைக்கவேண்டும் எனும் ஆசையும் அவன் உடலில் புதியதோர் சக்தியைப் புகுத்தின போலும் இல்லையெனில் அவன் அவ்விதம் நடந்து கொள்வது எவ்வாறு சாத்தியமாகியிருக்கக்கூடும்?. அவன் குபீரென எழுந்து அம்பு போல் வேகமாகப் பாய்ந்தான். திறந்து கிடந்த வாசலின் வழியே ஒடி இருளினுள் மறைந்து விட்டான். -

தன்னைத் தாக்குவதற்காகத் தான் அப்படி அவன் வில்விசை

ாதிரித் துள்ளி எழுகிறானோ என்று ஒருகணம் மலைத்து நின்று

ட்ட முரடன் அவனுடைய செயலைக் கண்டதும் கடகட வென்று ரித்தான். உற்சாகத்தோடு ரசித்து வெறித்தனமாகச் சிரித்தான்.

கணவனின் போக்கு மனைவியின் உயிரைப் போக்கடிக்கக் கூடிய அதிர்ச்சியாகத் தோன்றியது. அவள் உள்ளம் செத்துவிட்டது. அலறி அடித்து அழ வேண்டும் போலிருந்தது அவளுக்கு

தன்னைத் தடுப்பவர் எவருமில்லை என்ற துணிவோடு, உற்சாகத்தோடு, தீமைபுரியத் திட்டமிட்ட வெறியன் அவள்மீது கைவைத்தான்.

தீக் கங்கு மேலேபட்டதுபோல் 5+ಕಣ அலறினாள் அவள். தன்னைவிட்டுவிடும்படி கதறினாள். л -

அவனோ அவள் கூச்சலையும் துயரத் துடிப்புகளையும் வேடிக்கையாகக் கண்டு நகைத்து அவளையே பார்த்தபடி இருந்தான் ஒருகணம். பொங்கி எழுந்த வெறியோடு, உணர்ச்சிக் கொதிப்போடு, மிருகத்தன்மையோடு அவன் அவளைப்பற்றி இழுத்தான். தழுவ முயன்றான்.

அப்பொழுது அவன் எதிர்பாராத - எதிர்பார்த்திருக்க ಆLT5 சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. அவன் மண்டையில் படாரென்று ஒரு அறை விழுந்தது. அவன் முதுகிலும் பட்டது தொடர்ந்து