பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரிமை - T -

சற்றே தயங்கிய அவன் பிறகு துணிந்து கை நீட்டி அவள் கையைப் பிடித்து அவளை இழுததுக் கொண்டு வெளியேறினான். அவன் நடையிலே வேகம் இருந்தது. அவன் பிடியிலே உறுதி இருந்தது. அவன் கண்களிலே வஜ்ர ஒளி கனல் தெறித்துக் கொண்டிருந்தது.

அவளுக்கு பயமாக இருந்தது. அவளுடைய ப்யம் சிறிது சிறிதாக அகன்று கொண்டிருப்பது போலவும் தோன்றியது. அவள் அவன் இழுத்த இழுப்பின்படி இயங்கினாள். -

வெளி உலகத்து இருள் அவர்களையும் விழுங்கியது.

- 2

செல்லம்மா கண் விழித்தபோது,

ஏதோ பயங்கரமான துர்க்கனவின் பேய்ப் பிடியிலிருந்து விடுபட்டு எழுந்தது போன்ற உணர்வு அடைந்தாள். ஆயினும் முந்திய இரவில் நிகழ்ந்தவை எல்லாம் வெறும் கனவுகள் அல்ல என்ற நிச்சயம் அவளுக்கு இருக்கத்தான் செய்தது. அதை உறுதிப்படுத்தியது அவள் கிடந்த புதிய இடம். -

தங்கள் வீட்டில் தானும் தன் கணவனும் அஞ்சி நடுங்கிக் கிடந்ததும். தடியன் புகுந்ததும், தன்னைக் காப்பாற்ற வேண்டிய கணவ்ன் "அவள் விதிப்பயன் அவளுக்கு' என்று எண்ணியவன் போல் ஆபத்து நிலையில் விட்டுவிட்டு ஒடிப்போனதும் அவள் மறந்து விடக்கூடிய அனுபவங்களாக இல்லை. அவை, தீயினால் சுட்ட வடுக்கள் மாதிரி, அவள் நினைவில் ஆழமாகவும் அழுத்தமாகவும் பதிந்து துயருறுத்திக் கொண்டிருந்தன.

அந்நியன் ஒருவன் தைரியமாக வீட்டினுள் புகுந்து அவளுக்குப் பாதுகாப்பு அளிக்கவராது இருந்திருப்பின் அவளுடைய கதி என்ன ஆகியிருக்கும்? அதை நினைக்கவும் அவளுடைய உடல் நடுங்கியது. இதயம் திக்திக் கென்று அடித்துக்கொண்டது. -

"நல்ல வேளை தெய்வம் தான் அந்த நேரத்திலே அவரை அங்கே கொண்டு வந்து விட்டிருக்கணும்" என்று அவள் எண்ணினாள். அவரு நல்லவரு தான் என்று நன்றியுடன் நின்ைத்துக் கொண்டாள். -