பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/107

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வல்லிக்கண்ணன்

வீட்டினுள்ளிருந்து அவளை இழுத்து வந்து இருட்டில் எங்கெங்கோ அவன் அலையவைத்தபோது செல்லம்மா அவனைப் பற்றி மோசமாகத் தான் எண்ணினாள். முதலாவது முரடனைப் போலவே இவனும் கெட்ட எண்ணத்தோடு செயல் புரிகிறவனாகத் தான் இருப்பான் - எவ்வேளையிலும் இவன் தன்னை பலாத்காரம் செய்யக்கூடும் - என்று அவள் நினைத்தாள். அவன் அவசரப்படுத்திக் கொண்டிருந்தான். அவளால் அவனுக்குச் சமமாய் வேகமாக நடக்க இயலவில்லை. பயமும் பலவீனமும் அவளைத் தள்ளாடச் செய்தன. இருட்டு வேறு. சரியான தடமும் இல்லை. அடிக்கடி வழியில் கிடந்த ஏதேதோ அவள் பாதங்களை 'சுகம் விசாரித்து" தொல்லை கொடுத்தன. கல்லும் முள்ளும் தங்கள் சக்தியைக் காட்டிக் கொள்ளத் தவறவில்லை. ஒரு இடத்தில் கல் ஒன்று காலில் கடுமையாகத் தாக்கி விடவே, அவள் "அம்மா' என்று ஓலமிட்டுக் கொண்டு உட்கார்ந்தாள். ரத்தம் வருவதாகத் தோன்றியது. சகிக்கமுடியாத வலி. அவனோ 'உம்.உம், சீக்கிரம். சத்தம் போடாதே. எழுந்து மெதுமெதுவாக நடந்து பாரு" என்று சொல்லிக் கொண்டிருந்தான். அவளுக்கு எரிச்சல் ஏற்பட்டது. "நான் எக்கேடும் கெடுகிறேன். என்னை சும்மாவிட்டு விட்டுப் போனால் போதும்" என்று முனங்கினாள். அவன் இவ்வளவு சிரமப்பட்டுவிட்டு மறுபடியும் உன்னை ஆபத்திலே சிக்கவிடுவது நியாயமாகாது" என்று சொன்னான்.அவள் வலியினாலும் அசதியாலும் சோர்வுற்று அங்கேயே படுத்து விட்டாள். அவன் காத்து நின்று பார்த்தான். காலதாமதம் வீண் ஆபத்துக்களுக்கே வழி வகுக்கும் என்று கருதியதால், அவன் அவளை அணுகிக் குனிந்தான். அவனும் முரடன் மாதிரியேநடந்துகொள்வான் என்று எண்ணியிருந்த அவள் அவனுடைய் செய்கையைத் தவறாகக் கருதி அச்சத்தால் அலறினாள். மூர்ச்சையானாள்.அதுவும் நல்லதே என்று நினைத்து அவன் அவளை மெதுவாகத் துக்கி எடுத்துச் சுமந்து சென்றான். பத்திரமான இடம் ஒன்றில் அவளைத் தூங்க விட்டுவிட்டு அவன் போய்விட்டான். -

பாதி வழியிலேயே அவள் விழித்துக்கொண்டாள். அவன்

தனக்குத் தீங்கு நினைக்கவில்லை. நல்லது செய்யவே எண்ணியிருக் கிறான் என்பது அவளுக்குப் புரிந்தது. எனினும் அவள் மயங்கிக் கிடப்பதுபோலவே நடித்தாள் பாதுகாப்பான இடத்தில் அவளைச் சேர்த்துவிட்டு, அவன் வெளியே சென்று கதவைச் சாத்திய பிறகுதான்