பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/109

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வல்லிக்கண்ணன்

தெரிந்தவுடன், அவன் குணத்துக்கும் போக்கிற்கும் பொருத்தமான பெயர் அவனுக்கு அமைந்திருந்ததை எண்ணி அவள் அதிசயித்தாள். - காத்தலிங்கம் நல்லவன். பலசாலி. அக்கிரமங்களையும் அநியாயங்களையும் கண்டிப்பதற்குப் பின்வாங்காதவன். அவனாக வம்புச் சண்டைக்குப் போகமாட்டான். உண்மையிலேயே உதவி தேவைப்படுகிற யாருக்காவது பரிந்து சண்டை போடத் துணிந்தால், கடைசிவரை எதிர்த்து நின்று போராடத் தயங்கமாட்டான். அவன் வியாபார விஷயமாக அவள் இருந்த ஊருக்கு அடிக்கடி வருவது உண்டு. அவள் கணவன் முத்துமாலையை அவனுக்குத் தெரியும்.

முத்துமாலை மனைவியைத் தனியாக விட்டுவிட்டு ஓடிப்போன இரவில், காத்தலிங்கம் தற்செயலாக அவ்வீட்டருகே வந்தவன், உள்ளே பயங்கரமான அலறல் எழுவதைக் கேட்டு எட்டிப்பார்த்தான். நிலைமையை எளிதில் புரிந்துகொண்டான். அபலைப் பெண்ணைத் துன்பப்படுத்தத் துணிந்த அயோக்கியனுக்கு சரியான பாடம் கற்பிக்க முன்வந்தான்.

"மனித உணர்வுள்ள எவனும் செய்யக்கூடியகாரியம்தான் இது" என்று அவன் கூறினான். அவள் அவனை "தெய்வம் போல அப்படி இப்படி என்று துதித்து நன்றி கூற முயன்றபோதுதான் அவன் இதைச் சொன்னான். *

அவளது கணவனின் போக்கைப் பற்றி அவள் மூலம் அறிந்ததும், "முத்துமாலை அப்படிச் செய்திருக்கக்கூடாது என்று மட்டுமே அவன் சொன்னான். அவனை அவள் முன்னிலையில் பழிக்கவோ பரிகசிக்கவோ அவன் விரும்பவில்லை. "அவனைத் தேடிப் பிடித்து உன்னிடமே கொண்டு வந்து சேர்க்கிறேன் என்றும் அவன் அறிவித்தான்.

செல்லம்மா வசதியாக வாழ்வதற்குத் தேவையான அனைத்தும் குறைவில்லாமல் கிடைத்துக் ாெகண்டிருந்தன. எனினும் அவள் மனம் நிறைவுறவில்லை. அவள் சதா தன் கணவனைப் பற்றித்தான் எண்ணிக் கொண்டிருந்தாள். அவனது குணத்தையும் போக்கையும் எண்ண எண்ண அவன்மீது அவளுக்கு ஏற்பட்டிருந்த வெறுப்பு வளர்ந்தே வந்தது.

அவன் தன்னைத் தேடித் திரிவான் எப்படியும் திரும்பி வந்துவிடுவான் என்று அவள் ஆசைப்பட்டாள். இன்று வருவான்.