பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/110

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


98 ஐ உரிமை |

இன்று வந்தேவிடுவான்" என்று கனவு வளர்த்து வந்தாள். ஆனால், ஓடிச் சென்ற ஒவ்வொரு தினமும் அவள் ஆசையோடு வளர்த்த கனவுப் பயிரைத் தீய்த்துச் சென்றது.

முன்பு அவள் குடியிருந்த ஊரில் வெடித்த வெறிக்கூத்து ஒருவாறு அடங்கியது. அங்கு சுட்ட மண்ணும் குட்டிச் சுவரும், நாசவேலையை நினைவுபடுத்தும் சின்னங்களும் மலிந்து கிடந்தன. அவற்றின் நடுவே அமைதி கொலுவிருக்கத் தொடங்கியது. புத்துயிர்ப்பு சிலிர்த்தது. புது மலர்ச்சி இனிமை பரப்பியது. மீண்டும் அவ்வூரின் வாழ்க்கை பழைய தடத்திலே நகரலாயிற்று.

காத்தலிங்கம் அடிக்கடி சகல நிகழ்ச்சிகளையும் அவளிடம் அறிவித்து வந்தான். முத்துமாலை வந்துவிடலாம் என்றுதான் அவனும் எண்ணியிருந்தான். நாட்கள் நகர நகர அவனுடைய நம்பிக்கையும் தேய்ந்து கொண்டிருந்தது. "முத்து மாலை இப்படிப்பட்டவன் என்று நான் நினைத்ததே இல்லை" என்று மட்டுமே அவன் அவளிடம் சொன்னான். -

அவனுக்கு அநாவசியமான சுமையாக இருக்கக்கூடாது என்று எண்ணிய செல்லம்மா பலவித அலுவல்கள் செய்து பணம் தேடுவதில் மும்முரமாக ஈடுபட்டாள். என்றுமே உழைப்புக்கு அஞ்சியதில்லை அவள் இருப்பினும், அவனுடைய உதவியும் அவளுக்குத் தேவையாகத்தானிருந்தது. -

மாதங்கள் ஓடின. செல்லம்மாவின் உள்ளத்திலே கணவனைப் பற்றிய வெறுப்பும் விரோதமும் முற்றிவிட்டன. அவளுக்குக் காத்தலி ங்கத்தின்மீது பற்றுதலும் பாசமும் ஏற்பட்டிருந்தன. -

"கட்டின பெண்டாட்டியைக் காப்பாற்ற முடியாதவன் புருஷனா? அவனை நான் ஏன் புருஷன் என்று மதிக்கவேண்டும்? நான் இருக்கிறேனா. செத்தேனா என்று கவலைப்படாமல் எங்கோ போய்விட்டவனைப் பற்றி நான் ஏன் பக்தியொடும் உரிமையோடும் எண்ணிக் கொண்டிருக்கவேண்டும்? என்று அவள் நினைத்தாள். "இனி அவன் என் புருஷனுமல்ல. நான் அவன் மனைவியுமல்ல. அவன் என்மீது உரிமை கொண்டாட, அவன் கட்டியதாலி இருக்கிறதாக்கும், உரிமை கொண்டாடுகிறவன் தன் கடமையை ஒழுங்காக நிறைவேற்ற வேண்டியது அவசியமா இல்லையா? மனைவி கணவனின் உடைமை என்றால், தனக்கு உரியவளை எந்த நெருக்கடியிலும் எப்பாடு பட்டாவது காப்பாற்ற வேண்டிய கடமை