பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- |வல்லிக்கண்ணன் 99. அவனுக்கு உண்டுதானே? கடமை தவறியவன் பிறகு உரிமை கொண்டாட முன்வந்தால் அதில் ஏதாவது நியாயம் இருக்க முடியுமா

எண்ணி எண்ணித் தனக்கென ஒரு தடம் அமைத்துக் கொண்டு மேலும் முன்னேறிச் சென்ற அவளுடைய சிந்தனை அப்படித்தான் வாதித்தது. அவள் ஒரு முடிவுக்கு வந்தாள். அவளைக் காப்பாற்றத் திராணியோ தெம்போ பெற்றிராத கோழை முத்துமாலை கட்டியிருந்த "உரிமைச் சரடை" தாலியை அறுத்து. தலையைச் சுற்றி விட்டெறிந்தாள் செல்லம்மா. -

ஆயினும் அவள் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கிவிட வில்லை. நாட்கள் சாரமற்ற முறையிலே ஒடிக்கொண்டுதான் இருந்தன.

செல்லம்மா காத்தலிங்கத்தைப் பற்றி நன்றியுடன் எண்ணிவந்தாள் முதலில் நாளாக ஆக அவனைப் பற்றி நினைப்பதிலும் அவனைப் பார்ப்பதிலும் அவளுக்கு ஒரு ஆனந்தம் ஏற்படலாயிற்று. அவன் உதவியைப் பெறுவதிலும் அவனோடு பேசிக் கொண்டிருப்பதனாலும் அவளுக்குத் தனியானதொரு மகிழ்ச்சி பிறந்தது. அவன்மீது தனக்கு ஆசை வளர்ந்து வருகிறது என்பதை அவளாலேயே மறுக்கவோ மறைக்கவோ முடியாத கட்டமும் வந்து சேர்ந்தது.

அவள் பெண். அவள் வாழத்தான் விரும்பினாள். வாழ்வில் பாதுகாப்பு அளிக்கக்கூடிய ஒரு துணை அவளுக்குத் தேவை. அன்பு காட்டவும் அவளிடம் அன்பு செலுத்தவும் ஒரு ஆண் தேவை.

காத்தலிங்கம் அவள் மன நிலையைப் புரிந்து கொண்டான். அவளடைய உளப் பண்பையும் உணர்ச்சிகளையும் உணர்ந்து போற்றக் கூடியவன் அவன்.

ஆகவே அவர்கள் இருவரும் வாழ்க்கையில் நல்ல துணைவர்கள் ஆனார்கள்.

3

ஒரு வருஷத்துக்குப் பிறகு ஒருநாள்.

அந்த வீட்டின் வாசலில் வந்து நின்றான் ஒருவன். மெலிந்து சோர்ந்து, அழுக்கடைந்த வேஷ்டியும் சிக்குப்பிடித்த தலையும்