பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/112

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


# 100 靈 ੋਜਨ਼

குழிவிழுந்த கன்னங்களும் கட்டை கட்டையாக இருந்த 574 உடைய உருவம்.

திண்ணையில் நின்ற செல்லம்மா அவனைப் பார்த்ததுமே இனம் கண்டு கொண்டாள். எனினும் அதை அவள் காட்டிக் கொள்ள விரும்பவில்லை.

"இங்கே இப்ப ஒண்னுமில்லே போ போ என்று எவனோ பிச்சைக்காரனுக்கு உத்திரவிடுவது போல் உணர்ச்சியற்ற குரலில் கூறினாள் அவள்,

அவன் திடுக்கிட்டான். திகைப்படைந்தான் செல்லம் என்னைத் தெரியவில்லையா உனக்கு? என்றான். அவன் குரலில் நடுக்கம் இருந்தது. அவனுக்கு ஏற்பட்ட உணர்ச்சிக் குழப்பத்தினால் எழுந்ததாக இருக்கலாம் அது,

'உன்னைத் தெரிந்திருப்பதும் ஒன்றுதான். தெரியாமல் இருப்பதும் ஒன்றுதான். என்னைப் பொறுத்தவரை." என்று பேசியவள் சட்டென்று பேச்சை நிறுத்திக்கெண்டாள். நீ செத்துவிட்டாய் என்றுதான் அவள் சொல்ல விரும்பினாள். அதை அவனிடம் சொல்ல வேண்டியதில்லை என்ற நினைப்பு பேச்சுக்குத் தடை விதித்தது. செல்லம், நீ திமிர் பிடிச்சுப் பேசுவது சரியல்ல. என்ன இருந்தாலும் நான் உன்னைத் தொட்டுத் தாலி கட்டி உன்னோடு கூட வாழ்ந்தவன்." - அவன் ஆங்காரமாய் கூச்சலிடத் தொடங்கினான்.

"சீ நிறுத்து! நீயும் ஒரு மனுசன்னு மூஞ்சியைக் காட்ட வந்துட்டியே உன் பெண்டாட்டி செல்லம் செத்து ஒரு வருஷம் ஆச்சு அவள் எக்கேடும் கெடட்டுமின்னு விட்டுவிட்டு பயந்து ஒடிப்போன வீரசிங்கம் ஒரு வருஷம் கழிச்சப்புறம் தேடி வந்து உரிமை கொண்டாடத் துணிஞ்சிட்டுது து, வெட்கமில்லே?" என்று ஆத்திரத்தோடு கத்திய செல்லம்மாள் காறித்துப்பினாள். விடுவிடென்று உள்ளே போனாள்.

சட்டி பானைகள் உருளும் ஓசை கடமுட வென்று ஒலித்தது. ஏதோ ஒரு பானையிலிருந்து ஒன்றை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள் அவள். "இந்தா, இதைச் சொல்லித்தானே நீ உரிமை கொண்டாடவந்தே, இதை நீயே எடுத்துக் கொண்டுபோ இனிமே