பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன்

அதற்கென விசேஷமாகச் செய்த ஓங்கி உயர்ந்த உருவம் ஒன்று. அதன் முண்டக் கண்களில் சோழி முட்டைகளைப் பதித்து உடைத்து விடுவார்கள். முட்டைகளிலிருந்து வழிந்து கொண்டிருக்கும் திரவப் பொருள்தான் சூரத்தாய் சிந்தும் கண்ணீர் அந்த ஆலி பொம்மை"யை பூத உருவை உள்ளே புகுந்து நின்று இரண்டு பேர் தூக்கித் திரிவர். அவர்கள் கைகளால் தப்திப்" என்று ஓசை எழ அறைந்துகொண்டு அழுகை ஒலி பரப்புவர்.

கும்பல் கூடும் சிறுவர்களும் பெரியவர்களும் சூரத் தாயின் துயர ஒலத்தைப் பெரிதாக்கி ஒலி பரப்புவார்கள்.

அவர்களின் மாரடிப்பு ஓசையும் அழுகை ஒலியும் காற்றிலே கலந்து வந்து என் காதுகளைத் தாக்குகிற போதெல்லாம்

இதோ அவற்றினும் மேலாய் பொங்கி எழுகின்ற அவலக் குரலை நான் தெளிவாகக் கேட்க முடிகிறது. பார்க்கப் போனால், வெறும் பிரமைதான் அது. எனினும் என் இதயம் வேதனையால் கனக்கிறது. துயரம் தொண்டையில் கூடுகிறது. கண்களிலே நீர் மல்குகிறது. .

உங்களுக்கு இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கிறதோ என்னவோ? நல்ல இலக்கியத்தைப் படிக்கிறபோது, திறமையாக எழுதப்பட்டுள்ள கதையிலே முக்கியமான ஒரு கட்டத்தை வாசிக்கிறபோது, துயரம் அனுபவிக்க நேர்ந்தவர்கள் தம் கதையை உணர்ச்சியோடு சொல்வதைக் கேட்கிறபோது என் உள்ளத்தில் வேதனை கவிய, என் கண்களிலே நீர் பொங்கிவிடும். வேதனையின் குரல் என் உணர்ச்சிகளை எளிதில் கிளறிவிட்டு விடும்.

ஒலமும் ஒப்பாரியும் பொங்கி எழுகிற போதெல்லாம் அவற்றின் மேலாக விம்மி எழுகின்ற சோக அலறல் ஒன்று எனது நினைவுப் பெருவெளியிலே அடங்காத நாதமாய் - அடக்க முடியாத ஒலமாய் - ஒலிக்கத் தொடங்கிவிடும். வாழ்க்கை எனும் சோகக் காவியத்திலே என்றோ ஒருநாள் காலம் எழுதிவைத்த நாடகத்தின் நினைவு என் உள்ளத்திலே அழிக்க முடியாத கீறலாய் - ஆழப் பதிந்த "கோரையாய் - பதிந்து விட்டது. அதே காலம் பின் மீண்டும் மீண்டும் வேதனை நாடகங்களை விளையாட விடுகிற போதெல்லாம் - மனிதர்கள் விளையாட்டுக்காகவோ, மெய்யாகவே தானோ, கோர