பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o சூரன் குத்து | அந்தி இறந்து, இரவு தன் கறுப்புக் கொடியை வெற்றிகரமாக நிலை நாட்டிவிட்ட பிறகும்கூட அந்த தாய் அழுதுகொண்டிருந்தாள். அவளுடைய மகனின் உடலை "அதிகாரமும் சட்டமும்' அவளிடமிருந்து பிடுங்கிக்கொண்டு அவளை மிரட்டி அனுப்பியபோது, அவள் அலறிய அழுகை-அம்மம்ம

-இதோ இப்பொழுதுக்-ட என் காதுகளில் ஒலி செய்கிறது அது.

"சூரத் தாய் துரத்துத் தெருமூலை திரும்பி, அருகிலிருக்கும் வீதிக்கு வந்து விட்டாள் என்பதை முன்னேறி வரும் ஆரவாரப் பேரொலி உணர்த்துகிறது எனக்கு. எனினும் என் காதுகளிலே இறந்த காலத்தின் ஒற்றைக் குரல்தான் எதிரொலித்து, என் இதயத்தில் வேதனையைக் கிளறிவிடுகிறது.

-உலகில் அசுரசக்தி அகற்றப் பட்டுவிட்டதா? அல்லது, அமுக்கி ஒடுக்கி வைக்கப்பட்டது என்றாவது சொல்ல முடியுமா?. மனிதக் குழந்தையைப் பறிகொடுத்த தாயின் துயரத்தினின்றும் மாறுபட்ட தாகவா இருந்திருக்கும் அசுரக் குழந்தைகளை இழந்த தாயின் வேதனை?. - -

என் உள்ளம் எனும் கடலிலே மோதுகின்ற நிரந்தரமான அலைகளில் இவையும் சில விடைதான் எனக்குப் புரியவில்லை.

எனது பார்வை படருகின்ற இடமெல்லாம், இருள் கவிந்து கிடக்கக் காண்கிறேன்.

இப்பொழுதும் இருட்டிவிட்டது ஒளி இழந்த கிழப் பகலை இருள் கொழுத்த இரவு விழுங்கிவிட்டுச் சிரிக்கிறது. அது கொரித்துத் துப்பிய எலும்புத் துண்டுகள்போல விண் நெடுக நட்சத்திரங்கள் சிதறிக் கிடக்கக் காண்கிறேன். என் உள்ளத்திலே ஏனோ அவை நம்பிக்கை ஒளி புகுத்தக் காணோம்! -