பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனப் பிராந்தி |

எனக்கு எப்போதுமே பூத பிரேத, பிசாசு, பயங்கரக் கதைகள்மீது விசேஷமான மோகம். நானே அத்தகைய கதைகள் அநேகம் எழுதியிருக்கிறேன். *

அவற்றிலே ஒரு கதையை, இரவு நேரத்தில் படுக்கை அறையில் கணவன் பக்கத்தில் இருந்து வாசித்த ஒரு பெண்மணி அன்று இரவு பூராவும் துங்க முடியாமல், விளக்கையும் அணைக்காமல் வைத்துக்கொண்டு, ஒவ்வொரு மூலையிலும் எதெதையோ கண்டும், ஒவ்வொரு ஒசையிலும் என்னென்னத்தையோ கற்பனை செய்துகொண்டும் அவதிப்பட்டாளாம். இந்தச் செய்தியை அறிய நேர்ந்ததும் நான் ரசித்துச் சிரித்தேன். அவளைக் கோழை என்றும் பயந்தாங்கொள்ளி என்றும் கூறி நகையாடினேன்.

அவ்விதமான பயங்கரக் கதைகளை எழுதும் நான் பெரிய துணிச்சல்காரன் என்றுதான் அந்தச் சகோதரியும் அவள் கணவனும் எண்ணினார்கள். இன்னும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மற்றவர்கள் உள்ளத்தில பயம் எனும் உணர்வைத் தூண்ட வேண்டும் என்ற ஆசையோடு கதை எழுத உட்காருகிற நானே பாதியில் பயந்து நடுங்கிவிடுவேன். அதாவது, கதவைத் தாளிட்டுக் கொண்டு எழுத உட்காராதிருந்தால் கதவைத் திறந்துபோட்டிருந்தால் எனது கதாபாத்திரத்தின் தாயாதிகள் புகுந்துவிடும் என்ற பயம் எனக்கு ஒருசமயம் அப்படித்தான். ரொம்ப ஜோரான பிசாசுக் கதையை மிகுந்த ஈடுபாட்டோடு எழுதிக் கொண்டிருந்தேன். பகல் நேரம்தான். இரவு வேளைகளில் நான் கதை எழுதுவது கிடையாது என்பதுதான் உமக்குத் தெரியுமே வெகு கர்ம சிரத்தையோடு என் எழுத்தில் நான் ஆழ்ந்திருந்தபோது,

கிலுக்-கிலுக். இரும்பை இரும்போடு உராய்ந்து எழுப்பிய சிற்றொலி சர்ரட்-சரட்-காலடி ஓசை போன்ற சத்தம் உகுங் - தானே ரசித்து மகிழும் கிளுகிளுப்பு. - என் உடம்பு புல்லரித்தது. அது என்ன? என் மனம் ரைஸ்மில்லாகித் தடதடத்தது. நான் கதவைத் தாளிடவில்லையே. அது கடவுளே. உச்சிப் பகல் நேரம் என்னை பயம் கவ்வ. எனக்கு வேர்த்துக் கொட்டியது. எந்தப் பிசாசு வந்து என்னைப் பலி கொள்ளப்போகிறதோ என்ற திகிலுடன் உட்கார்ந்திருந்தேன். ஆனால்,