பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/122

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ைமனப் இாதி j

அந்தச் சமயம் பார்த்து விளக்குக்கு வலிப்பு கண்டது. "டபக், டடக். குளோஸ் அறையில் இருட்டு கவிந்தது. ஆண்டவனே. அல்லாவே, ஏசு கிறிஸ்துவே, "அர்ஜூனன் பேர் பத்து' - இடி இடித்தால் தான் இதைச் சொல்லவேண்டும் என்ற நினைப்பு கூட இல்லை. எல்லாப் பேர்களையும் உச்சரித்தால், ஏதாவது ஒரு பெயருக்கு எபெக்ட் இருக்கலாமல்லவா? அப்படியும் என் பயம் டங்குவதாயில்லை. முகத்தைத் தலையணையில் புதைத்துக் கொண்டேன் இருந்தாலும், சவப்பெட்டியிலிருந்து எழுந்து நடமாடும் பிரேதமும், அது மனிதரை வேட்டையாடுவதும், அதை ஒருவன் துரத்துவதும்.அது அடைக்கலம் தேடி என் ரூமுக்குள் வரத்துடிப்பது போலவும்.கனவா. நனவா, கற்பனையா? நான் தூங்கினேனா? விழித்திருந்தேனா? எனக்கு ஒரே பதைபதைப்பு தான். •.

ఇE வார காலம், இரவில் வெளியே தலைகாட்டவே அஞ்சினேன். கள்ளிச் செடி உயர்ந்த எலும்பு மனிதனாகப் பயமுறுத்தும், புளியங்கொம்புகளிடையே வெளவால்கள் பல்லி ளிக்கும். சே என்ன பயங்கர் அனுபவமடா அப்பனே!

இந்த விதமான பயம் நான் பிசாசுக்கதைகளை அதிகமாகப் படித்ததனாலும், பயங்கரக் கதைகளை எழுதக் கற்பனை செய்து கொண்டு திரிந்ததாலும் வந்த வினைதான் என்று நீர் நினைக்கலாம். அது சரியல்ல. என்பிள்ளைப் பிராயத்திலிருந்தே முறைத்தெழுந்த கோளாறு இது என்று நான் நிச்சயம் செய்து விட்டேன். -

நான் சின்னப்பயலாக இருந்த போது, பெரியவர்கள் மனமிரங்கி என்னையும் நாடகம் பார்க்க அழைத்துப் போவது உண்டு. ஆனால் நான் நாடகத்தை எங்கே பார்த்தேன் மற்றவர்களையாவது பார்க்க விட்டேனா? மேடையில் கோரமான உருவங்கள் வந்துவிட்டால் போதும் அல்லது அடிக்கிற-உதைக்கிற காட்சி வந்தாலும் சரி. என்னையும் அடிக்கப் போவது போல்-பூதம் என்னைப் பிடித்து விழுங்க வருவதாக எண்ணிக்கொண்டு-நான் "ஓ என்று ஊளையிட்டு அழுவேன். என்னை வெளியே இழுத்துக் கொண்டு வருவார்கள். சிலர் எரிச்சலோடு ஏசுவார்கள். எனினும் என் பயம் தீராது.

எவ்வளவோ பயங்கரக் கனவுகள் எத்தனையோ பயங்கர நினைவுகள் சொல்லிமாளாது, நண்பரே, சொல்லி மாளாது அவற்றை உரமாக்கி, பயம் எனும் உணர்வு விசித்திர உருவமேற்று வளர்ந்து